இதை கட்டாயம் படியுங்கள் உடல் மற்றும் இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் உணவுகள்!

போதிய உடல் உழைப்பு இல்லாமை, மோசமான உணவுகளை உண்பது, அதிகப்படியான இறைச்சிகளை சாப்பிடுவது போன்றவற்றால், உடல் மற்றும் இரத்தத்தில் நச்சுகள் அதிகமாக சேர்கின்றன.இப்படி இரத்தத்தில் நச்சுகள் (TOXINS) அதிகம் சேர்வதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்து, பல நோய்கள் உடலில் குடியேற வழிவகுக்கும். எனவே அடிக்கடி இரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

ஒருவர் இரத்தத்தை அடிக்கடி சுத்தம் செய்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் தடுக்கப்பட்டு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.இங்கு இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் சில உணவுகளும், மூலிகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கல்லீரலில் குளுதாதயோன் என்னும் புரோட்டீன் உற்பத்தியை தூண்டி, இரத்த மண்டலத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். மேலும் எலுமிச்சை உடலில் அத்தியாவசிய நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து, டாக்ஸின்களை கரையும் பொருட்களாக மாற்றி உடலில் இருந்து சிறுநீரின் வழியே வெளியேற்றும்.

மஞ்சள்
மஞ்சளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான குர்குமின் பல்வேறு நன்மைகளை வழங்கும். அதில் கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவது, டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே அடிக்கடி நீரில் மஞ்சள் தூளை கலந்து குடியுங்கள்.

ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரியில் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடனட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனை உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள், கிருமிகள் மற்றும் ப்ரீ ராடிக்கல்களை உடலில் இருந்து வெளியேற்றும்.

கேரட்
கேரட்டில் குளுதாதயோன் என்னும் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது கல்லீரலை சுத்தம் செய்ய உதவும். அதுமட்டுமின்றி கேரட்டில் வைட்டமின் ஏ, பி, சி, கே மற்றும் பொட்டாசியம் போன்றவைகளும் உள்ளதால், இவை உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும். இதனால் உடலியக்கம் சீராக இருக்கும். ஆகவே அடிக்கடி கேரட் ஜூஸ் அல்லது கேரட்டை எடுத்து வாருங்கள்.

செம்பருத்தி
செம்பருத்திப்பூவின் இதழ்களை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டு தினமும் காலை, மாலை 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் உடலில் பலவீனம் குறைந்து இரத்தம் தூய்மையடையும்.செம்பருத்தி பூவை எடுத்து இதழ்களை வெட்டி போட்டு அதில் எலுமிச்சை பழச்சாறு விட்டு வெயிலில் வைத்து எடுத்து பிசைந்து சாறு எடுத்து சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீர் அடைந்து இரத்தம் விருத்தியாகும்.

தேவையான அளவு செம்பருத்தி பூவை எடுத்து இதழ்களை வெட்டி போட்டு அதில் எலுமிச்சை பழச்சாறு விட்டு காலையில் வெயிலில் வைத்து மாலையில் எடுத்து நன்றாக பிசைந்து சாறு எடுத்து சாறுடன் சர்க்கரை கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தி 1 தேக்கரண்டிஅளவு நீரில் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீர் அடைந்து இரத்தம் விருத்தியாகும்.

பீட்ரூட்
பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சம்பழச் சாற்றில் தோய்த்து சாப்பிட்டு வர, ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும்.
பீட்ரூட்டை வாரத்துக்கு நான்கு நாட்கள் சாப்பிட்டாலே போதும். நல்ல பலன் கிடைக்கும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, நியாசின் ஆகியவற்றுடன் இரும்பு, சோடியம், பொட்டாசியம், அயோடின், தாமிரம் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்ல பலனைத் தரும்.

முருங்கை கீரை
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தியாகிறது. இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

Leave a Reply