மருத்துவ குறிப்பு

இதயநோய் பாதிப்பு

 

இதயநோய் பாதிப்பு >நமது இதயத்துக்குள் இருக்கும் வால்வுகள் தான் இதயத்தை நன்றாக செயல்பட வைக்கின்றன. இதயத்தின் மேல் பகுதியான ஏட்ரியத்தில் இருந்து கீழ்ப்பகுதியான வெண்ட்ரிக்கிளுக்கு ரத்தத்தை அனுப்பும் போது, மைட்ரல் என்கிற வால்வு சுமார் 3.5 சதுர செ.மீ. முதல் 5 செ.மீ. வரை திறக்க வேண்டும்.

ஆனால் சிலருக்கு இது ஒரு சதுர செ.மீ. கூட திறக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும். இதைத் தான் இதய நோய் என்கிறோம். இந்த இதய நோயை ருமாட்டிக் என்ற காய்ச்சல் தான் உருவாக்குகிறது. சிறு வயதில் இதய நோய் தாக்கி இருந்தாலும் தெரிவதில்லை. 15 வயதுக்கு மேல் தான் இது தெரியவருகிறது.

தொண்டையில் புண், கரகரப்பு ஏற்படுவது தான் இதற்கான அறிகுறிகள். பீட்டா, மாலிட்டிக் ஸ்ட்ரெப்டோ காக்கஸ் என்ற வகை நுண்கிருமிகளின் தாக்குதலின் விளைவு இது. பெரும்பாலானவர்கள் இதில் இருந்து தப்பி விடுகின்றனர். மூன்று சதவீதத்தினர் மட்டுமே தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ருமாட்டிக் காய்ச்சலை அலட்சியப்படுத்தினால் ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும்.

முதலில் பெரிய முட்டுகளான முழங்கை, முழங்கால், மணிக்கட்டு, கணுக்கால் போன்ற இடங்களில் தான் மாறி மாறி வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும். அதேநேரத்தில் இதயத்தின் மூன்று அடுக்குகளான எண்டோ கார்டியம், மையோ கார்டியம், பெரி கார்டியம் ஆகியவற்றையும் லேசாக தட்டிப் பார்க்கிறது.

இந்த சமயத்தில் இந்த தாக்குதலின் வீரியம் குறைவாக இருப்பதால் நிறைய பேர் இதை அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். இதனால் ருமாட்டிக் காய்ச்சல் அடிக்கடி வந்து இதய வால்வுகளை நிரந்தரமாக பழுதாக்கி விடுகிறது. இந்த காய்ச்சலைப்பற்றி மருத்துவ உலகில் ஒரு பழமொழி இருக்கிறது. ‘மூட்டுகளை நாவால் சுவைத்து விட்டு இதயத்தை சாப்பிட்டு விடுகிறது‘ என்பது தான் அது.

ரத்தத்தை ‘பம்ப்’ செய்து அனுப்பும் இதயத்தின் வேலையில், வால்வுகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ரத்தம் ஒரே திசையில் பயணிக்க இந்த வால்வுகள் சரியான சமயங்களில் மூடி, திறக்க வேண்டும். வால்வுகள் சரியாக மூட முடியாமலோ, திறக்க முடியாமலோ போனால் ரத்த ஓட்டம் தடைபட்டு நம் உடல் இயக்கம் தடுமாறுகிறது.

வீணான ரத்தக்கசிவும் ஏற்படுகிறது. மேலை நாடுகளில் இதய நோய் 30 முதல் 60 வயது வரை உள்ளவர்களை தாக்குகிறது. நமது நாட்டை பொறுத்தவரை 3 முதல் 15 வயது வரை உள்ளவர்களை தாக்கும். அதில் 10 வயதில் இருந்தே இதய வால்வுகள் பழுதடைய ஆரம்பித்து விடுகின்றன. 15 முதல் 25 வயதிற்குள் இதய நோயின் விளைவுகள் தெரிய ஆரம்பித்து விடுகின்றன.

உண்மையில் வால்வுகள் பாதிக்கப்பட்டால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். சரியான மருத்துவ விழிப்புணர்வால் மேலை நாடுகளில் இதயநோயை முற்றிலுமாக ஒழித்துக் கட்டி விட்டார்கள். இங்கும் அதை செய்ய முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button