உங்களுக்கு அடர்த்தியான புருவம் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க!

எல்லாருக்குமே தான் அழக இருக்க வேண்டும் என்று எண்ணம் அடிப்படையில் தோன்றும். அவ்வாறு நாம் அழகாக தோன்ற முகம் முக்கியமான ஒன்று. அதிலும் புருவம் ஒருவரை வசிகரிக்கச் செய்வதில் முக்கிய காரணமாக உள்ளது. சிலர் பியுட்டி ஃபார்லர் சென்று புருவத்தை மேலும் அழகுபடுத்திக் கொள்வர் அது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதை விட நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு அடர்த்தியான அழகான புருவத்தை பெறலாம்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்யில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் இரும்பு சத்து புருவ வளர்ச்சிக்கு உதவுகிறது. தேங்காய் எண்ணெய் சருமத்தில் புரத இழப்பை குறைக்கிறது. இதனால் புருவங்கள் வலிமையாகிறது. புருவங்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு, மறுநாள் காலையில் வெந்நீரால் முகத்தை கழுவவும். தினசரி இரவில் இதனை செய்து வர புருவங்கள் அடர்த்தியான அழகான வளரும்.

செம்பருத்தி பூ
செம்பருத்தி பூக்களை அம்மியில் வைத்து நன்றாக அரைத்து கொண்டு புருவத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ச்சியாக செய்து வர புருவம் கருமையான மற்றும் அடர்த்தியாக வளரும். கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்கள் , நீரிழிவு நோய் உள்ளவர்கள், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அறுவை சிகிச்சைக்கு திட்டமிடுகிறவர்கள் ஆகியோர் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு உபயோக படுத்த வேண்டும்.

வெந்திய பேஸ்ட்
வெந்தியத்தை நீரில் ஊற வைத்து அரைத்து பெஸ்ட் செய்து புருவங்களில் வாரத்துக்கு 2 முறை தடவி வர புருவம் அடர்த்தியாக வளர்வதை உணர்லாம். வெங்காய சாறு
வெங்காய சாறுடன் எலுமிச்சை சாற்றை தண்ணீர் சேர்த்து புருவங்களில் தடவி வர புருவங்கள் அடர்த்தியானதாக மாறும்.

Leave a Reply