உங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வரக்கூடாது என்றால் இந்தப் பழத்தை சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்…

உடல் நலனில் மீதும் தங்களுடைய ஆரோக்கியத்தின் மீது மிகப்பெரிய அக்கறை கொண்டிருப்பவர்கள் உணவின் மீதும் கவனத்தை செலுத்துவார்கள். தாங்கள் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்று நீங்கள் சோதிக்கும் போதே இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனை இப்படிச் சாப்பிடலாமா என்பது தான் அது. செயற்கையான கலப்படம் இல்லாத இயற்கையான காய்கறி மற்றும் பழமாக இருந்தாலும் சில வகைப் பழங்களை ஒன்றோடொன்று இணைத்துச் சாப்பிடுவது தவறான பழக்கங்களில் ஒன்றாகிடுகிறது. உண்மையில் அந்தப் பழத்தையோ காய்கறியையோ தனியாகச் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் உண்டு.

ஆனால் சாலட் அல்லது ஜூஸ் செய்து சாப்பிடும் போது சில வகைப் பழங்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. அது என்னென்ன என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வாழைப்பழம் : டெசர்ட் வகைகளில் ஒன்றாக கருதப்படும் புட்டிங் மற்றும் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடக்கூடாது. இது சாப்பிட்டதும் நிறைவான உணர்வைத் தந்திடும். ஆனால் அதிகளவிலான டாக்ஸினை உற்பத்திச் செய்திடும். இதனால் நாம் சுறுசுறுப்பாக செயல்படுவது குறைந்து மந்தமாகும். சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் அதிகமுண்டு.குறிப்பாக குழந்தைகளுக்கு இவ்வகை உணவு கொடுப்பதை அறவே தவிர்த்திடுங்கள்.

ஆரஞ்சு மற்றும் கேரட் : ஆரஞ்சுப் பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. ஆனால் அதனுடன் கேரட் சேர்த்து சாப்பிடக்கூடாது. அல்லது கேரட் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதும் தவறானது. இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்திடும்.

அன்னாசியும் பாலும் : அன்னாசிப்பழத்துடன் பால் கலந்து சாப்பிடாதீர்கள். பலரும் அன்னாசிப்பழ மில்க்ஷேக் குடிக்கிறார்கள். அதனைக் குடிப்பதும் தவறானது. பால் மற்றும் தயிர் இரண்டிலுமே ப்ரோமிலைன் என்ற சத்து இருக்கிறது இது நம் உடலின் ஒருவகை டாக்சினை உருவாக்குகிறது. இதனால் தலைவலி,வயிறு உப்புசம்,வயிற்று வலி,வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படக்கூடும்.

பப்பாளிப்பழம் : ஏராளமான நன்மைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.இதனை பழமாக அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. இவற்றுடன் எக்காரணத்திற்காக எலுமிச்சை சாற்றை கலந்து சாப்பிட்டு விடாதீர்கள். இது ரத்தசோகைப் பிரச்சனையை அதிகரித்துவிடும்.

கொய்யாப்பழம் : கொய்யாவையும் வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.இது வயிற்றில் கேஸ் பிரச்சனையை உருவாக்கிடும். அதோடு அமில உற்பத்தியும் அதிகரிக்கும்.இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

பால் : தினமும் காலை உணவாக ஓட்ஸ் அல்லது பிரட் இவற்றுடன் ஆரஞ்ச் ஜூஸ் குடிப்பது தான் வழக்கமாக இருக்கிறது. அதனை முதலில் நிறுத்தங்கள். ஓட்ஸ் மற்றும் பிரட்டிலிருந்து கிடைக்கூடிய ஸ்டார்ச் ஏற்றுக் கொள்வதில் சிரமங்கள் உண்டாகும். ஆரஞ்சுப் பழத்துடன் பால் சேர்த்துக் கொண்டால் அல்லது குறுகிய இடைவேளியில் இதனைச் சாப்பிட்டால் செரிமாணக்கோளாறு உண்டாகும்.

காய்கறி பழங்கள் : காய்கள் மற்றும் பழங்கள் என இரண்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், பழங்களில் அதிகளவு சர்க்கரை இருப்பதால் காய்கறி சரியாக ஜீரணமாகாது, இதனால் பல்வேறு உபாதைகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும் .

ஆப்பிள் : பழங்களை சாப்பிடும் போது அதன் காம்பினேசனில் கவனமாக இருங்கள். இனிப்புப் பழங்களுடன் வெறும் சுவைக்காக அமிலத்தன்மை வாய்ந்த பழத்தை சேர்ப்பது தவறான பழக்கம். இனிப்புச் சத்து உடைய பழம் என்றால் அந்த வகைகளைச் சார்ந்த பழத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆப்பிள்,ப்ளம்ஸ்,வாழைப்பழம்,தர்பூசணி ஆகியவை இனிப்புச் சத்து நிறைந்தது. இவற்றுடன் சிட்ரிக் அமிலம் நிறைந்த ஆரஞ்சு,திராட்சை,எலுமிச்சை,அன்னாசிப்பழம்,ப்ளூபெர்ரீ ஆகியவற்றை சேர்க்க கூடாது. அதே போல செமி ஆசிட்டிக் பழம் என்று சொல்லப்படக்கூடிய மாம்பழம்,க்ரீன் ஆப்பிள்,ஸ்ட்ராப்பெரி ஆகியவற்றுடன் இனிப்பு பழத்தையோ அல்லது சிட்ரிக் அமிலத்தன்மை வாய்ந்த பழங்களையோ சேர்த்து சாப்பிடாதீர்கள்.

நொறுக்குத் தீனி : நொறுக்குத்தீனி சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை. அன்னாசி, மாம்பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரீஸ், கிவி, வாழைப்பழம் போன்ற பழங்களை நொறுக்குத் தீனி போல சாப்பிடலாம். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள், தாது உப்புகள், நார்ச்சத்துக்கள், போலேட் ஆகியவை அடங்கியுள்ளன. தினசரி மதிய நேரத்தில் சாலட் போலவும் சாப்பிடலாம். மாலை நேரத்தில் பழங்களுடன் முந்திரி, பாதம், பிஸ்தா, போன்றவையும், கிரீம் கலந்து ஆரோக்கியமான டெசர்ட் ஆக சாப்பிடலாம்.

ப்ரேக் ஃபாஸ்ட் பழங்கள் : காலை உணவில் கண்டதையும் உண்பதை விட பழங்களை சேர்த்துக்கொள்வது நல்லது. உலர் பழங்களையும் காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆப்பிள், இனிப்பு கிழங்கு போன்றவை சத்தான காலை உணவாகும்.சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

ஜூஸ் : பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

சாப்பிட்ட பின்னர் : சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது, உணவானது பழத்தினால் கிடைக்கும் பலன்களை தடுத்து விடுகிறது. மேலும் ஒரு வேளை நீங்கள் சாப்பிட்ட உணவு கெட்டுப் போயிருந்தாலோ, புளித்துப் போயிருந்தாலோ பழமும் அதனுடன் சேர்ந்து அமிலமாக மாறி வயிறு உப்பும். பழத்தின் சத்து அனைத்தும் வீணாகி விடும்

உபாதைகள் : ‘தர்பூசணி சாப்பிட்டால் வாந்தி வருகிறது’, துரியன் பழம் சாப்பிட்டால் வயிறு உப்பி விடுகிறது’, ‘வாழைப்பழம் சாப்பிட்டால் டாய்லெட் போக வேண்டும் என தோன்றுகிறது’ இப்படி பலர் சொல்வதை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். உணவு சாப்பிட்ட பிறகு, இந்த பழங்களை சாப்பிடுவதால்தான் பிற பழங்களுடனோ அல்லது வேறு உணவுகளுடனோ சாப்பிடுவதால் தான் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.

விதைகள் : பழங்களை ஜூஸாக்கும்போது, நார்ச்சத்துக்கள் அகன்றுவிடும். மேலும், நுண்ஊட்டச் சத்துக்களும் கிடைக்காது. பழங்களை நறுக்கிச் சாப்பிட விரும்புபவர்கள், பெரிதாக நறுக்கிச் சாப்பிட வேண்டும். சிறியதாக நறுக்கிச் சாப்பிடக் கூடாது. பழங்களின் விதைகளை நேரடியாக விழுங்கக் கூடாது, எனவே, பப்பாளி, ஆப்பிள், திராட்சை முதலான பழங்களில் இருக்கும் கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும்.

எப்போது சாப்பிடலாம் ? : பொதுவாக, பழங்களை உணவுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.உணவுடன் சேர்த்துச் சாப்பிடும்போது, பழங்கள்தான் முதலில் ஜீரணம் ஆகும். உணவு, அரை மணி நேரம் கழித்துத்தான் ஜீரணம் ஆகும். இதனால், செரிமான மண்டலம் பாதிக்கப்படும். சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம். ஆரம்பகட்டத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் வராது. தினமும் உணவு உண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தொடர்ந்தால், படிப்படியாகச் செரிமான மண்டலம் பாதிப்படையும். உணவு உண்பதற்கு முன்னர் பழங்களைச் சாப்பிட வேண்டும். பழங்களைச் சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்வது நல்லது. நன்றாகப் பசிக்கும்போது பழம் சாப்பிடுவது உடனடி எனர்ஜி தரும். அதன் பின்னர் அரை மணி நேரம் கழித்து உணவைச் சாப்பிடலாம்.ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் பழங்களைச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

பழங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? : பழங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் தேவை. நல்ல வண்ணத்தில், எந்த அழுக்கும் இல்லாமல், பளபளவென இருக்கும் பழங்களை வாங்கக் கூடாது. ஆப்பிள் போன்ற பழங்களில் மெழுகு தடவி விற்பார்கள். அதை, அப்படியே சாப்பிடும் போது, மெழுகு உடலுக்குள் சென்று பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். செயற்கை ரசாயனம் கலக்காத ஆர்கானிக் பழங்களை வாங்குவது நல்லது. எந்தப் பழத்தை வாங்கினாலும் வேகமாக வெளிவரும் குழாய் நீரில் நன்றாகக் கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும்.

பலாப்பழம் : சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே சாப்பிடலாம்.நார்ச்சத்து, மாவுச்சத்து இரண்டும் அதிகமாக இருக்கின்றன.வைட்டமின் ஏ, சி, கே ஆகியவையும் இருக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால், எலும்புகள் வலுவடையும்.கரோட்டின் சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பலாப்பழம், மலச்சிக்கலுக்கான சிறந்த நிவாரணி. உணவுக்குழாயில் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றலும் உண்டு.

மாதுளை : நுண்ஊட்டச் சத்துக்கள் நிறைந்த பழம் மாதுளை. ரத்தக் குழாய்கள் தடிப்பதால் ஏற்படும் இதயநோய்களைத் தடுக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு.அனைத்து வகை புற்றுநோய்க்கும் சிறந்த மருந்து மாதுளை. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக, ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.கரு நன்றாக வளர மாதுளை உதவும். எனவே, கர்ப்ப காலத்தில் அவ்வப்போது மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது. ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, அதன் அளவைக் குறையச் செய்யும்.

வாழை : வாழைப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடலில் உள்ள வறட்சி , உடல் சூடு இரண்டையும் சமப்படுத்தும்.உடலுக்கு அவசியம் தேவைப்படும் பொட்டாசியம் அதிக அளவில் இருக்கிறது. வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கும். ஞாபகமறதியைத் தடுக்க அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடலாம்.வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் ஏற்படும் சமயங்களில், வாழைப் பழத்தைச் சாப்பிட்டால், மூளையில் செரட்டோனின் ஹார்மோன் சுரந்து, மன அழுத்தம் குறையும்.

சீதாப்பழம் : ஒரு சீதாப்பழத்தில் ஒரு நாளுக்குத் தேவையான வைட்டமின் சி-யில், 25 சதவிகிதம் வரை கிடைக்கும்.சீதாப்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் எனப் பல்வேறு தாது உப்புகள் நிறைவாக உள்ளன. மக்னீசியம் அதிகம் இருப்பதால், உடலில் உள்ள தசைகள் நன்றாகச் சுருங்கி விரியும். இதயத் தசைகளுக்கு மிகவும் நல்லது. நார்ச்சத்து, புரதச்சத்து அதிகம் இருக்கின்றன. தாமிரம் அதிகம் இருப்பதால், உடலின் இணைப்பு மூட்டுக்கள் உறுதியாகும்.சூடான உடல்வாகு கொண்டவர்கள், சூட்டுக்கட்டி போன்ற பிரச்னை உள்ளவர்கள் சீதாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, உடல் குளிர்ச்சி அடையும்.

மாம்பழம் : மாம்பழத்தில் கரோட்டின் சத்து மிக அதிகம் என்பதால், பார்வைத்திறன் மேம்படும். கண் நோய்கள் வராமல் தடுக்கும்.மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம். இரும்புச் சத்து இருப்பதால், ரத்த சோகையைத் தடுக்கும்.மாம்பழத்தில் மில்க்ஷேக் செய்து சாப்பிடக் கூடாது. மாம்பழ ஜூஸ் சாப்பிட விரும்பினால், கொஞ்சம் ஜாதிக்காய் மற்றும் இஞ்சித் தூளுடன் மாம்பழத்தை மிக்ஸியில் அரைத்துப் பருகலாம்.

நாவல்பழம் : நாவலில் ஆன்தோசயனின் சத்து அதிகம் இருக்கும். ஆப்பிளைவிடவும் அதிக அளவில் பல்வேறு வகையான ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்து இருப்பதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்கள், நாவல்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் சிறுநீர்ப்போக்கு கட்டுக்குள் வரும். கல்லீரல், மண்ணீரல் போன்ற வற்றைச் சுத்தப்படுத்திச் சீராக்கும்.நாவல்பழம் வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது.பசியைத் தூண்டும் ஆற்றல் நாவலுக்கு உண்டு. உடல் வெப்பத்தைக் குறைக்கும்.தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியும்.

அன்னாசி: அன்னாசியில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, நீரில் கரையாத நார்ச்சத்து இரண்டும் இருக்கின்றன.ரத்தம் உறைதல் பிரச்னையைச் சரிசெய்யும். ஆர்த்ரைட்டிஸ் போன்ற மூட்டுவலிகளைத் தடுக்கும். செரிமான கோளாறுகளைச் சீர் செய்யும்.இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், பல்வேறுவிதமான புற்றுநோய்களில் இருந்து காப்பாற்றும். அன்னாசியில் ‘புரோமிலெய்ன்’ எனும் அரிய வகை சத்து இருக்கிறது. அன்னாசியில் இருந்து இந்த சத்தைப் பிரித்துத்தான், உடல் எடையைக் குறைப்பதற்கான மாத்திரைகளை உருவாக்குகின்றனர்.

நெல்லிக்கனி : நம் ஊரில் இரண்டு வகையான நெல்லிக்கனிகள் உள்ளன. ‘அரை நெல்லிக்கனி’ எனப்படும் சிறிய நெல்லிக்கனியில் சத்துக்கள் குறைவு. ‘மலை நெல்லிக்கனி’ எனப்படும் பெரிய நெல்லிக்கனியில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. நெல்லிக்கனி, நெல்லிக்காயைவிடக் கொஞ்சம் புளிப்புச்சுவை குறைவானது.காரத்தைத் தவிர்த்து இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்து சுவைகளும் கலந்த ஒரே பழம் நெல்லிக்கனி மட்டுமே. மாதவிடாய்க் கோளாறுகளை நெல்லிக்கனி சரிசெய்யும். இதய நோய் வராமல் தடுக்க, தினமும் நெல்லிக்கனி சாப்பிடலாம். வைட்டமின் சி நிறைந்தது. ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையைத் தடுக்கும். உடல் எடையைக் குறைக்க நெல்லிக்கனி உதவும். நெல்லிக்கனியில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கிறது.

கொய்யா : வைட்டமின் சி அதிகம் உள்ள பழம் என்றால், அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆரஞ்சு. ஆனால், விலை உயர்ந்த ஆரஞ்சைக் காட்டிலும் மூன்று மடங்குக்கும் அதிகமான வைட்டமின் சி கொய்யாப் பழத்தில் இருக்கிறது. இது, புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.கொய்யாப்பழம் மலச்சிக்கலைப் போக்கும். வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இந்தப் பழத்தில் மட்டுமே அதிக அளவு கிடைக்கிறது.

பேரிக்காய் : ஆப்பிளில் உள்ள அளவுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் பேரிக்காயிலும் இருப்பதால் இதனை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று அழைப்பார்கள்.கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. கருவின் வளர்ச்சிக்குத் துணைபுரியும். கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்.பேரிக்காய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும். வைட்டமின் ஏ, சி, இ, கே ஆகியவை சிறிதளவு இருக்கின்றன.

ஆரஞ்சு : இது நம் ஊர் ஆரஞ்சுப் பழம். ஓர் ஆரஞ்சுப் பழத்தில் ஒரு நாளுக்கு அவசியம் தேவையான வைட்டமின் சி இருக்கிறது.ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் ‘பெக்டின்’ என்ற ரசாயனம், குடல் புண்கள் உருவாவதைத் தடுக்கிறது. நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளையும் ஆரஞ்சு குறைக்கிறது. உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆரஞ்சுப் பழத்தில் அதிகம் இருக்கிறது. ஆரஞ்சுப் பழத்திலும், பழத்தோலிலும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதைவிட பழமாகச் சாப்பிட்டால், சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

ஆப்பிள் நன்மை : ஆப்பிளில் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் இருக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்டும் அதிகம் இருப்பதால், ஆப்பிள் சாப்பிட்டால் நோய்கள் அண்டாது. ஆப்பிள், ஆரம்பகட்ட பித்தப்பைக் கற்களை வளரவிடாமல் தடுத்து, கரைத்து வெளியேற்றும்.மாவுச்சத்து மற்றும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து ஆப்பிளில் இருப்பதால், உடல் எடையைக் குறைக்கும். செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும். லூட்டின் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்களும் ஆப்பிளில் நிறைந்துள்ளன.வளர் இளம் பருவத்தினர், பெண்கள், முதியவர்கள் என அனைவருக்குமே ஆப்பிள் ஏற்றது.

இலந்தைப்பழம் : அதிக தாகம், ரத்தம் கசிதல் போன்ற பிரச்னைகளை இலந்தைப்பழம் சீர் செய்யும். வயிற்றுப்புண்களை ஆற்றும். ஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும். மற்ற சிட்ரஸ் பழங்களைவிட 20 சதவிகித வைட்டமின் சி இதில் அதிகமாக இருக்கிறது.இலந்தைப்பழம் உடல் சூட்டைக் குறைத்து, பித்தத்தைச் சமப்படுத்தும். கல்லீரல் சுருக்கம் உள்ளவர்களுக்கு நல்லது.

தர்பூசணி : நம் ஊர் தர்பூசணி சதைப்பிடிப்பு கெட்டியாக இருக்காது. ஓரளவு இனிப்புச் சுவையும் மிதமான சிவப்பு நிறமும் கொண்டது.தர்பூசணியைப் பழமாகச் சாப்பிட்டாலே நீர்ச்சத்து கிடைக்கும். எனவே, ஜூஸாகச் சாப்பிடத் தேவை இல்லை. தர்பூசணியில் கரோட்டின் சத்து அதிகம் இருப்பதால், கண்களுக்கு நல்லது. லைக்கோபீன் சத்து அதிக அளவு உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த தர்பூசணியை, வெயில் காலங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சூரியக் கதிர்களால் பாதிக்கப்படும் தோல் மீண்டும் பொலிவடையும்.

பப்பாளி : கரோட்டின் அதிகம் இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது.பப்பாளியைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மலச்சிக்கல், மூலம் போன்ற நோய்கள் அண்டாது. ‘பாபெய்ன்’ எனும் அரிய வகை என்சைம் பப்பாளியில் இருக்கிறது. இது ஜீரணத்தைத் தூண்டும். மேலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.பப்பாளியைச் சாப்பிட்டுவந்தாலும், சருமத்தில் தடவிவந்தாலும், தோல் பொலிவுபெறும். வயிற்றுப்புண், வயிற்றில் ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றைச் சீர்செய்யும்.

சப்போட்டா பழம் : சப்போட்டாவை செங்காயாகச் சாப்பிடுவது உடலுக்கு பலம் சேர்க்கும். சப்போட்டாவைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், தோல் பொலிவடையும். சப்போட்டா ஃபேஷியல் செய்வது உடனடி முகப்பொலிவைத் தரும். சப்போட்டா உடனடி ஆற்றலைத் தரும். பழச்சர்க்கரை அதிகம் இருப்பதால், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள், உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின் சி, இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முலாம்பழம் : முலாம்பழம் நம் ஊரில் அதிகம் விளையக்கூடியது. கிர்ணிப்பழமும் முலாம்பழத்தின் மற்றொரு வகையைச் சார்ந்ததே.முலாம்பழத்தில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. நார்ச்சத்து, மாவுச்சத்து இரண்டும் அதிகம் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. முலாம்பழத்தை வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். மலச்சிக்கல், அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் முலாம்பழத்துக்கு உண்டு. கொடி வகையைச் சார்ந்த பழங்கள் அனைத்துமே தோல் பொலிவடைய உதவும். முலாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இளம்வயதில் வரும் முதுமைத் தோற்றம் மறையும்.

சாத்துக்குடி : அனைவரும் சாப்பிட ஏற்ற பழங்களில் சாத்துக்குடிக்கு முக்கியமான இடம் உண்டு. வைட்டமின் சி அதிகம் நிறைந்தது. உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு சாத்துக்குடி ஏற்றது. ஆனால், எடை குறைக்க விரும்புபவர்கள் சாத்துக்குடியைப் பழமாகவே உரித்து, சுளைகளை மென்று உண்ணுவது நல்லது. ஜூஸாக அருந்துவதைத் தவிர்க்கலாம். செரிமானக் கோளாறுகளைச் சரி செய்யும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை விரைவில் அதிகரிக்கும். சிகிச்சை முடிந்து மீள்பவர்களுக்கு சாத்துக்குடி சிறந்த மருந்து. வயிற்றுப்புண்களை ஆற்றும். குறிப்பாக பெப்டிக் அல்சர் பிரச்னையைச் சரிசெய்யும்.

அத்திப்பழம் : அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இது, ரத்தத்தை விருத்தி அடையச் செய்யும். ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது. உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் தன்மை அத்திக்கு உண்டு என்பதால், சிறந்த டீடாக்ஸாகச் செயல்படும். மூல நோயைத் தடுக்கும் ஆற்றலும் அத்திக்கு உண்டு. நா வறட்சி உள்ளவர்கள் அத்திப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும். பேச்சு சரியாக வராமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு, அத்திப் பழத்தைச் சாப்பிடக் கொடுப்பது நல்லது. நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால், எலும்புகள் வலுவடையும்.

Leave a Reply