உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படி சொல்வது முற்றிலும் உண்மை தான்.

அதுமட்டுமின்றி, எலுமிச்சையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களில் முதன்மையானதாக உள்ளது. சொல்லப்போனால் இதனை இயற்கை தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

ஏனெனில் எலுமிச்சை உடலின் ஒவ்வொரு பாகத்தையும் மிகச்சிறப்பாக பாதுகாக்கும். குறிப்பாக சர்க்கரை நோயை அண்டவிடாமல் தடுக்கும் தன்மை இதற்கு உண்டு. மேலும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை உற்பத்தி செய்ய உதவி புரியும்.

எலுமிச்சையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் வளமாக இருப்பதால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றி, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.

எலுமிச்சை ஜூஸ் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறுவதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவியாக உள்ளது.

அதிலும் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து, அத்துடன் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால், இன்னும் நல்லது. முக்கியமாக இப்படி குடிப்பதால், அதில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து, பசியைத் தூண்டாமல் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

எலுமிச்சை ஜூஸ் செய்யும் போது, அத்துடன் தேன் சேர்ப்பதால், அவை சருமத்தை மென்மையாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவும்.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து தடுக்கும். இதில் உள்ள பொட்டாசியம், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதுடன், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும் உதவும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Leave a Reply