ஆரோக்கியம்எடை குறைய

அரிசி பால் கஞ்சியை ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் சிக்கென்ற உடலைப் பெற உதவும்..

தற்போது உடல் பருமன் பெரும் பிரச்சனையாக உள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வளிக்க பல வழிகள் இருந்தாலும், அனைத்துமே அனைவருக்கும் மாற்றத்தைக் காண்பிக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு உடனடி மாற்றங்கள் தெரியும், இன்னும் சிலருக்கு எடையில் எந்த ஒரு மாற்றமும் தெரியாமல் இருக்கும்.

koluppu 18312 14274

உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், உணவுகளில் கட்டுப்பாடு அவசியம். அதோடு கலோரிகள் நிறைந்த உணவுகள் உண்பதைக் குறைத்து, செரிமானத்தை மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அரிசி பால் கஞ்சியை ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால், அது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, சிக்கென்ற உடலைப் பெற உதவும். சரி, இப்போது அந்த அரிசி பால் கஞ்சியை எப்படி தயாரிப்பது என்றும், அதைக் குடிப்பதால் கிடைக்கும் வேறு சில நன்மைகள் குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்:

கைக்குத்தல் அரிசி – 1 கப்
தண்ணீர் – 8 கப்
சூரியகாந்தி எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 4 ஸ்பூன்

 

தயாரிக்கும் முறை:

* முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் அரிசியைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, மூடி வைத்து 15 நிமிடம் அரிசியை வேக வைக்கவும். சாதம் நன்கு வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்கவும்.

* பின் ஒரு பிளெண்டரை எடுத்து, அதில் இந்த சாதத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அத்துடன் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து, வேண்டுமானால் சிறிது பட்டை தூள் சேர்த்துக் கலந்து கொண்டால், அரிசி பால் கஞ்சி தயார்!

பயன்படுத்தும் முறை:

இந்த அரிசி பால் கஞ்சியை தினமும் 2 டம்ளர் குடிக்க வேண்டும். குறிப்பாக இதை காற்றுப்புகாத ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால், 2-3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இப்போது இந்த அரிசி பால் கஞ்சியைக் குடிப்பதால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்து காண்போம்.

நன்மை 1
இந்த கஞ்சியைக் குடித்தால், இதய பிரச்சனைகள், பக்கவாதம் போன்றவைகளின் தாக்கத்தைத் தடுக்கலாம். இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள் தான் காரணம்.

நன்மை 2
இந்த கஞ்சியினுள் உள்ள உட்பொருட்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைத் தூண்டி, உடலுக்கு ஓர் நல்ல பாதுகாப்பு கவசத்தை அளித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.

நன்மை 3
அரிசி பால் கஞ்சியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. மேலும் இதைக் குடித்தால், உடலால் உண்ணும் உணவுகளில் உள்ள வைட்டமின் சத்துக்களை எளிதில் உறிஞ்ச முடியும்.

குறிப்பு
உடல் எடையைக் குறைக்க அரிசி பால் கஞ்சியைக் குடித்தால், தினமும் தவறாமல் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இதனால் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button