மருத்துவ குறிப்பு

உங்கள் கண்களில்ஏதும் பிரச்சனைகள் உள்ளதா?அப்ப இத படிங்க!

இந்த காலக்கட்டத்தில் கண் சம்மந்தமான நோய்கள் எல்லா வயதினருக்கும் வருகிறது.

முக்கியமாக வயதாகும் போது கண்களில் பல்வேறு விதமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கண்புரை பிரச்சனைகள், விழித்திரை பிரச்சனைகள், கண் அழுத்த நோய் போன்ற பல்வேறு கண் நோய்கள் வயதானர்களுக்கு ஏற்படும்.

சிலர் கண்களில் ஏற்படும் பிரச்சனையை சாதாரணமாக விட்டு விடுவார்கள், அது முடிவில் கண் பார்வையை இழக்கும் நிலைக்கு கூட கொண்டு செல்லலாம்.

சில முக்கிய அறிகுறிகள் நமது கண்களில் பிரச்சனை உள்ளது என்பதை நமக்கும் உணர்த்தும், இதை வைத்து உடனடியாக மருத்துவரை அணுகினால் ஏற்படும் பெரிய பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க முடியும்.

கருவிழி நிறத்தில் மாற்றம்

அருகிலிருக்கும் அல்லது தொலைதூரம் இருக்கும் பொருள்கள் மீது கவனம் செலுத்துவதில் சிக்கல்

இரட்டை பார்வை

கண்கள் உலர்ந்து போய் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும்.

கண் வலி

கண் இமைகள் மீது கட்டி வளருதல்

கண்கள் கூசுதல்

பார்வை மங்குதல்

கண்களை சரியாக மூட முடியாது

கண் சிவந்து போகுதல்

திடீரென கண் தெரியாமல் போவது

இருட்டில் பார்க்க பழக நேரம் எடுத்தல்

மாறு கண் பிரச்சனை

* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்…201705220829194893 You can learn about the eyes SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button