ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதையும் தள்ளிப்போடுகிறார்கள். ஆனால் பெண்கள் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது நல்லதல்ல.

ஒரு பெண் தாய்மை அடைவதற்கான ஏற்ற வயது எதுவோ அதுவே அவளின் திருமண வயது. 23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான சரியான வயது. மீறிப்போனால் 30 வயது வரை கூட இருக்கலாம். கூடுமான வரைக்கும் 30 வயதுக்குள் தாய்மை அடைந்து விட வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.201804071207124136 Women right age for pregnancy SECVPF

இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். படித்து முடித்து, ஒரு பணியில் அமர்ந்து அப்பணியில் ஒரு நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் என்று எண்ணுவதால் 35 வயதுக்குப் பிறகு திருமணம் புரியும் பெண்கள் ஏராளம்.

30 வயதைத் தாண்டி திருமணம் செய்யும்போது கருமுட்டை உருவாகத் தாமதம், கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், எடை குறைவான குழந்தை என்பது போன்ற பிரச்னைகள் வரலாம். இது போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும். திருமணத்துக்கு முன்பும், கருத்தரிப்பதற்கு முன்பும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானதாகும்.

மருத்துவரின் வழிகாட்டுதலோடு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கருமுட்டையை முன்பே எடுத்து ஃப்ரீஸ் செய்து வைப்பதன் மூலம் எந்த வயதிலும் குழந்தை பெறலாம். ஆனால் அது சோதனைக்குழாய் மூலம்தான் சாத்தியப்படும். இதில் நூறு சதவிகிதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. குறிப்பிட்ட வயதுக்குள் தாய்மை அடைவது மட்டுமே சரியானது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button