அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

நீங்கள் முடியை நீக்க தேர்ந்தெடுக்கும் பொருள் மீது அதிக கவனம் என்பது இருத்தல் வேண்டும்.

பெண்கள் உடம்பில் தேவையற்ற இடங்களில் வளரும் முடியை நீக்குவது அவசியமாக, இதற்காக ஷேவிங்க், வேக்சிங் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். நீங்கள் முடியை நீக்க தேர்ந்தெடுக்கும் பொருள் மீது அதிக கவனம் என்பது இருத்தல் வேண்டும்.laser hair removal banner 1

ஒரு சிலர் வேக்சிங் அழற்சியினால் ஷேவிங்கை தேர்ந்தெடுப்பார்கள். ஒரு சிலர் ஷேவிங்க் செய்வதால் ஏற்படக்கூடிய சரும வெட்டு காரணமாக வேக்சிங்கை தேர்வு செய்வார். முடியை சரியான சமயத்தில் சரியான முறையில் எடுக்காமல் பிரச்சனை உருவாவது போல், முடியை எடுக்காமல் விடுவதாலும் பிரச்சனை என்பது உருவாகிறது.

நீங்கள் ஏதாவது நிகழ்ச்சியில் பங்கேற்க செல்ல முடிவு செய்தால் ஹேர் ரிமூவல் செய்துவிட்டு அதன்பின்னர் செல்வது நல்லது. ஒரு சிலர் முடியை ஆடைக்கொண்டு மறைப்பர். ஆனால், ஹேர் ரிமூவல் செய்வதால் மட்டுமே உங்கள் உடல் புத்துணர்ச்சியை உணரும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

அத்துடன் முடி வளர்ச்சி என்பது மறைமுக இடத்தில் காணப்படுவதால் கண்காணிப்பது என்பது மிக குறைவாக அமைகிறது. உடற்பயிற்சி செய்வதாலும், ஹார்மோன்களின் மாற்றத்தினாலும் கூட தேவையற்ற முடிகள் உங்கள் உடலில் வளரக்கூடும். ஹேர் ரிமூவல் என்பதை ஒரு சரியான நேரத்தில் திட்டமிட்டு செய்யாமல், நினைத்த நேரத்தில் செய்ய சிலர் ஆசைப்படுகின்றனர். ஆனால், இது தவறாகும்.

உங்கள் உடலில் வளரும் தேவையற்ற முடியை நீக்குவதற்கு திட்டங்கள் என்பது தேவைப்பட, அதற்கு ஏற்ப ஹேர் ரிமூவல் செய்ய வேண்டும்.

ஹேர் ரிமூவல் முழுவதுமாக செய்து பார்க்கும் முன், முதலில் உங்கள் சருமத்திற்கு ஏற்றதா இது என்பதை சரும சோதனையின் மூலம் தெரிந்துக்கொள்ள வேண்டும். உங்கள் சருமத்தில் ஒவ்வாத நிலையை அது ஏற்படுத்தினால் மருத்துவரின் ஆலோசனையுடன் சிறந்த ஹேர் ரிமூவலை தேடி செல்லலாம்.

எக்காரணம் கொண்டும் அனுபவத்தின் பெயரில் மற்றவர்கள் பரிந்துரை செய்வதை உறுதி அற்று தேர்ந்தெடுக்க கூடாது.

அவர்கள் சருமம் ஏற்றுக்கொண்ட ஒன்றை, உங்கள் சருமம் ஏற்றுக்கொள்ளாமல் போக,இறுதியில் தேவையற்ற தலைவலி தான் மிச்சம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button