ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’

உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’ ஆகும். புற்றுநோய், இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றுக்குத் தடை போடக்கூடியது இது.

வைட்டமின் டி கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின் ஆகும். மற்ற வைட்டமின்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது இது. மேலும் இந்த வைட்டமின் இயற்கையாகவே உடலில் உற்பத்தி செய்யப்படக்கூடியது.201804131425001796 1 Vitamin D. L styvpf

சரி, அன்றாடம் போதுமான அளவு ‘வைட்டமின் டி’யை பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா?

அதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றில், வைட்டமின் டி நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது, அதிகாலை சூரியக்கதிர்கள் உடலில் படும்படி உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்றவை முக்கியமானவை.

எப்படி வைட்டமின் டி குறைபாட்டை அறிவது? ரத்தப் பரிசோதனையின் மூலம் மட்டுமே இக்குறைபாட்டைக் கண்டறிய முடியும்.

வைட்டமின் டி சத்து, மீன்கள், பால் பொருட்கள், ஆரஞ்சுப் பழச்சாறு, சோயா பால், மாட்டின் கல்லீரல், பாலாடைக் கட்டி, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் டி உடலில் போதுமான அளவில் இருந்தால் மட்டுமே எலும்புகளால் எளிதில் கால்சியத்தை உறிஞ்ச முடியும்.

ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு தீவிரமாக ஆரம்பித்தால், அவர் பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். மேலும் வைட்டமின் டி குறைபாடு, குறிப்பிட்ட சில நோய்களுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது.

உதாரணத்துக்கு, வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்துமா பிரச்சினை ஏற்படலாம். அன்றாடம் போதிய அளவு வைட்டமின் டி சத்து உடலுக்குக் கிடைத்தால், அது நுரையீரலை வலிமைப்படுத்தும், சுவாசப் பாதையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்கும்.

வைட்டமின் டி மற்றும் கால்சியம், எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, வலிமைப்படுத்தும். இதனால் எலும்புகள் பலவீனமாவதும் எலும்பு முறிவு ஏற்படுவதும் தடுக்கப்படும்.

வைட்டமின் டி குறைபாடு இருந்தால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்பட நேரிடும்.

இதய நோய் மற்றும் ரத்த அழுத்தத்துக்கும் வைட்டமின் டி குறைபாட்டுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆகவே இப்பிரச்சினைகள் வராமல் தவிர்க்க, தினமும் போதுமான வைட்டமின் டி கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமான விஷயம், உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால், அது மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, மன இறுக்கத்தை உண்டாக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button