ஆரோக்கிய உணவு

உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் தெரிந்தால் இஞ்சியை மறந்தும் சாப்பிட்டு விடாதீர்கள்!

இஞ்சி. நம் சமையலறையில் அவசியம் இடம்பெறக்கூடிய ஒரு பொருள் . அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனைச் சாப்பிடுவதால், உணவுகளில் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன என்று நிறையத் தகவல்களை படித்திருப்போம். ஆனால் இந்தக் கட்டுரை இஞ்சியின் இன்னொரு முகத்தை உங்களுக்கு காட்டப்போகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தி வரும் மூலிகைகளில் ஒன்று, இஞ்சி நாம் அன்றாடம் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொண்டால், அதன் பலன் நம் ஆரோக்கியத்தை காத்திடும். இதே அளவுக்கு மீறிச் செல்லும் போது அவை பெரும் தீங்கினை விளைவித்து விடும்.

சராசரியாக ஒரு நாளைக்கு நான்கு கிராம் மேல் இஞ்சி சாப்பிடக்கூடாது.

ஏன் சாப்பிடக்கூடாது ? : இஞ்சி… செரிமானத்துக்கு உதவும் ஒரு மருத்துவ மூலிகை. அதே நேரத்தில் வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படும். என்றாலும், சில நேரங்களில் இதைத் தவிர்ப்பது நல்லது.   பொதுவாக, எல்லா மருந்துகளுக்குமே பக்கவிளைவுகள் இருப்பதுபோல, இஞ்சிக்கும் உண்டு. உண்மை… இஞ்சியை ஒருவர் அதிகம் உட்கொண்டால், இஞ்சியின் உறைதல் எதிர்ப்பின் காரணமாக வீக்கம், வயிற்றுப் பிரச்னைகள், இதயப் பகுதியில் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

கர்ப்பிணிகள்: இஞ்சியிலிருக்கும் செரிமானத்துக்கு உதவும் சில சத்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது அல்ல. வயிறு சுருங்குதல் அல்லது குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க அது வழிவகை செய்யும். குறிப்பாக, பிரசவத் தேதி அருகிலிருக்கும் பெண்கள், இதைப் பயன்படுத்தவே கூடாது. காலைக் கடனில் சிக்கல் இருப்பவர்கள் மட்டும், மிகக் குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ரத்தக் கோளாறு உடையவர்கள்: இது ரத்த ஓட்டத்துக்கு உதவி செய்யும் என்பதால், பிளட் டிஸ்ஆர்டர் (Blood Disorder) எனப்படும் ரத்தக்கோளாறு இருப்பவர்கள், இதைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. உதாரணமாக, சர்க்கரைநோய், உடல்பருமன், இதயக்கோளாறு, ரத்த ஒழுக்கு (Hemophilia) இருப்பவர்கள், ரத்தம் உறைதல் (Blood clotting) பிரச்னை உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

ரத்தம் உறைதல் : சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், பீட்டா – பிளாக்கர், இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், இதயக்கோளாறுகளுக்கு சிகிச்சை எடுப்பவர்கள், ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கான மருந்து எடுத்துக்கொள்பவர்கள், இதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். பொதுவாக இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்றாலும், உயர் ரத்த அழுத்தத்துக்காக மருந்து உட்கொள்பவர்கள் சேர்த்தால், சீரற்ற நிலை ஏற்படும். மூலிகை சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒருவர் இஞ்சியைச் சேர்த்துக்கொண்டால், இஞ்சியின் தன்மை அதிகரிக்கத் தொடங்கும். அதனால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இந்த நிலை, ரத்தம் உறைவதை முற்றிலுமாகத் தடுத்து, ரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

பித்தப்பைக் கல், குடல் பிரச்னை இருப்பவர்கள்: பித்த நீர் சுரப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால், பித்தப்பையில் கல் இருப்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். முழுதாக இஞ்சியை நசுக்காமல் சேர்த்துக்கொள்வது, குடலில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் அல்சர் இருப்பவர்கள், இஞ்சியைத் தவிர்ப்பது நல்லது.

ஆப்ரேஷன் செய்யப் போகிறவர்கள்: ஏதாவது ஒரு நோய்க்கான சிகிச்சைக்காக ஆபரேஷன் செய்யத் தயாராகும் நபர்கள், இஞ்சியை உணவில் சேர்க்கக் கூடாது. ஏனெனில், இஞ்சி அதிக ரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, ஆபரேஷனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே இஞ்சியைத் தவிர்க்க வேண்டும்.

எடை குறைவாக இருப்பவர்கள்: இஞ்சியில் இருக்கும் நார்ச்சத்துகள், வயிற்றில் பி.எச் நிலையை அதிகரிக்கும். மேலும், செரிமானத்துக்குத் தேவையான என்சைம்களை தூண்டியபடி இருக்கும். வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். இது, விரைவாக உணவை செரித்துவிடும். இந்த நிலை தொடர்ந்தால், எடை இன்னமும் குறையத் தொடங்கும். கூடுதலாக, முடி உதிர்தல், மாதவிடாய்க் கோளாறுகள், தசைகளில் சத்துக் குறைதல் போன்றவை ஏற்படும்.

அலர்ஜி : அதிகமாய் இஞ்சியை சாப்பிடும்போது, அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்துவிடும். நெஞ்செரிச்சல், வயிற்று வலி ஆகியவைகளை எற்படுத்திவிடும். உங்கள் உடல் சென்சிடிவானது என்றால், இஞ்சியும் அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியதுதான்.

இஞ்சி டீ : எப்போதெல்லாம் டீ குடிக்கின்றார்களோ அப்போதெல்லாம் இஞ்சி போட்டுக்கொள்ளவார்கள் இப்படியாவர்களிடம் காரணம் கேட்டால், இஞ்சி உடலுக்கு நல்லது என்று கூறுவார்கள். அதிகமாய் இஞ்சி டீ குடித்தால், நாக்கில் அரிப்பு, எரிச்சல், வாய்ப்புண், வயிறு எரிச்சல் ஆகியவை ஏற்படும். இஞ்சி டீ ரத்த அழுத்தத்தை குறைக்கும். குறைவான ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீ குடிப்பது உகந்தது அல்ல.

வயிற்றுப் போக்கு : இஞ்சியை அளவுக்கு அதிகமாக தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது அவை வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும். இஞ்சி செரிமானத்திற்கு உதவுகிறது என்றாலும் அளவு மீறும் போது அவற்றின் அமிலத்தன்மை அளவு அதிகரிப்பதால் உணவு சரியாக செரிமானம் ஆகமல் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

சர்க்கரை நோய் : பொதுவாக இஞ்சி சர்க்கரை நோயாளிகளுக்கான அருமருந்தாக சொல்லப்படுகிறது, இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைத்திடும். இதே நேரத்தில் நாம் இஞ்சியை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளும் போது, நம் உடலின் சர்க்கரையை பயங்கரமாக குறைத்துவிடும். நமக்கு சர்க்கரை மிகவும் குறைவதும் ஆபத்து தான்.

வாயுத் தொல்லை : நாம் எடுத்துக் கொள்ளும் இஞ்சியின் அளவு அதிகரிக்கும் போது அது செரிமாணப் பிரச்சனையை உண்டாக்கிடுகிறது. ஆரம்பத்தில் மைல்டாக தெரிகிற பிரச்சனை நாளடைவில் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். இது வயிற்றில் வாயுத் தொல்லையை உருவாக்கிடும்.

நெஞ்செரிச்சல் : அசிடிட்டியின் ஓர் அறிகுறியாக நெஞ்செரிச்சலை ஏற்படுத்திடும்.இஞ்சி நேரடியாகவோ அல்லது பிற வடிவத்திலோ அல்லது, வேறு ஏதேனும் உணவுப்பொருளுடன் சேர்ந்து சாப்பிட்டாலும் இப்பிரச்சனை ஏற்படும் என்பதால் நீங்கள் சாப்பிடும் உணவில் என்னென்ன பொருட்களை சேர்த்திருக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.

வாய் அலர்ஜி : வாய்,காது,தாடைப்பகுதிகளில் அலர்ஜி உண்டாகும். சில நேரங்களில் இது வீக்கத்தை ஏற்படுத்திடும். வாயில் ஏற்படக்கூடிய அலர்ஜியினால் சரியாக உணவு உட்கொள்ள முடியாது. அதனால் இஞ்சியை எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

சருமம் : குறிப்பிட்டுள்ள அளவுக்கு மீறி அதிகப்படியாக தினமும் இஞ்சியை ஒருவர் எடுத்துக் கொள்கிறார் என்றால் அவருக்கு சரும அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. சருமம் சிவந்து தடித்திருப்பது அவற்றில் முதன்மையானது.

எவ்வளவு ? : குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு கிராம் அளவு இஞ்சி கொடுக்கலாம். பெரியவர்கள் நான்கு கிராம் வரை சாப்பிடலாம். கர்பிணிப்பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு கிராம் இஞ்சிக்கும் அதிகமாக எடுப்பதை தவிர்த்திட வேண்டும்.

21 1511257738 10

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button