முகப் பராமரிப்பு

வெயிலால் நிறம் மாறும் முகத்தை பளிச்சிட சூப்பர் டிப்ஸ்…

அன்றாடம் நமது சருமம் தூசி, அழுக்கு மற்றும் இதர சுற்றுச்சூழல் காரணிகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோடைக்காலத்தை எடுத்துக் கொண்டால், தூசி, அழுக்குகளோடு, சூரியக் கதிர்களாலும் சருமம் படுமோசமாக பாதிப்பிற்குள்ளாகும். இதனால் பலருக்கு கோடையில் சருமம் சிவந்து எரிச்சலுடனும், இன்னும் சிலருக்கு வறட்சியடைந்து கருப்பாகவும் இருக்கும்.

சூரியனின் புறஊதாக்கதிர்கள் தொடர்ச்சியாக சருமத்தின் மீது படும்போது, அது சரும செல்களை கடுமையாக பாதித்து, சரும புற்றுநோய் வரும் அபாயத்தையும் உண்டாக்கும். எனவே வெயிலால் உங்கள் சரும நிறம் மாற ஆரம்பித்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வாருங்கள்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை வெளியே வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், அதனைக் கொண்டு முகம், கை, கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள எரிச்சல் உடனே தணிவதோடு, அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்களால், சரும செல்கள் ஊட்டம் பெறும்.

பால்

பாதிக்கப்பட்ட சருமத்தை புதுப்பிக்க உதவும் சமையலறைப் பொருட்களுள் பாலும் ஒன்று. பாலில் புரோட்டீன்கள், கொழுப்புக்கள், வைட்டமின்கள் போன்றவை ஏராளமான உள்ளதால், அது கொலாஜென் உற்பத்திக்கு உதவுவதோடு, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதற்கு குளிர்ந்த பாலை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி சருமத்தில் தடவி, பின் ஐஸ் கட்டிகளால் சிறிது நேரம் மசாஜ் செய்ய, சரும எரிச்சல் தணியும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தில் இருந்து விரைவில் விடுபடலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா, பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இது சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். அதற்கு க்ரீன் டீயை நன்கு குளிர வைத்து, பின் சருமத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் உள்ள நொதிகள், வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சாந்தப்படுத்தும். அதற்கு வெள்ளரிக்காய் துண்டுகளைக் கொண்டு தினமும் அடிக்கடி மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம், பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பிக்க உதவும். அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் முகம், கை, கால்களில் தடவி 1/2 மணிநேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சரும எரிச்சல் நீங்குவதோடு, வெயிலால் சிவந்த சருமமும் மறைய ஆரம்பிக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி201712200825105925 Winter Foods SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button