27.5 C
Chennai
Friday, May 17, 2024
diabetes 1
ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவுநோய் பாதிப்பு

கருவுற்ற தாய்மார்களின் கணையமும் கூடுதலாக இன்சுலினை சுரந்து இந்த அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் கரைத்து விடுகிறது. ஆனால், ஒருசில பெண்களுக்கு, அவர்களின் கணையம், கூடுதலாக தேவைப்படும் சர்க்கரையை சுரப்பதில்லை.diabetes 1

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவுநோய் பாதிப்பு, அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தை மூலம் மரபுவழியாக பரவலாம் என்பது பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, கருவுற்ற தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் இயற்கையிலேயே சுரக்கும் சில ஹார்மோன்கள் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்திவிடுகிறது.

அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, கருவுற்ற தாய்மார்களின் கணையமும் கூடுதலாக இன்சுலினை சுரந்து இந்த அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் கரைத்து விடுகிறது. ஆனால், ஒருசில பெண்களுக்கு, அவர்களின் கணையம், கூடுதலாக தேவைப்படும் சர்க்கரையை சுரப்பதில்லை.

இதனால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது. இதுவே கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பெண்களோடு ஒப்பிடும்போது, இந்திய பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் 11% அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மரபணுக்கூறுகள் மற்றும் குறைந்து வரும் உடல் உழைப்பு ஆகிய இரண்டு காரணிகள் பெண்கள் மத்தியில் கர்ப்பகால நீரிழிவை தூண்டுவதாகவும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன. கர்ப்பகால நீரிழிவுநோய் காரணமாக, தாயின் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை கருவில் இருக்கும் குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாக சென்று குழந்தையின் கணையத்தையும் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்கிறது.

Related posts

நாக்கை சுத்தம் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா உங்களுக்கு?…

sangika

மருத்துவ பண்புகள் நிறைந்த வெங்காயம் மோர்!…

sangika

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்

nathan

கர்ப்ப காலத்தில் சிசுவின் அங்க வளர்ச்­சி­களை அறி­வது எவ்­வாறு

nathan

என்னதான் பல் தேய்த்தாலும் பற்களில் மஞ்சள் கறையா? இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

மார்பகத் தொற்று

nathan

தாய்ப்பால் புகட்டும் போது குழந்தைடன் பேச வேண்டும்

nathan

இரண்டாவது முறை கருத்தரிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

nathan

மனஅமைதி, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு!…

sangika