தொப்பை குறைய

நீங்கள் தினமும் இந்த இரண்டையும் ஒன்னா கலந்து குடிச்சா தொப்பை காணாம போயிடும்! சூப்பர் டிப்ஸ்….

இன்று நிறைய பேர் உடல் பருமன் மற்றும் தொப்பையால் கஷ்டப்படுகிறார்கள். இதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளையும் பலர் பின்பற்றி வருகின்றனர். அதில் ஒரு சிறப்பான வழி ஜூஸ்கள் ஆகும். ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பல ஜூஸ்கள் உதவியாக இருக்கும். அதில் சிறப்பான ஒரு ஜூஸ் தான் கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ். இந்த இரண்டையும் ஒருவர் ஒன்றாக கலந்து குடித்து வந்தால், அதில் உள்ள கிளின்சிங் ஏஜென்ட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.

இந்த ஜூஸ் கலவை உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை வழங்கும். அதில் கேரட்டுகளில் இருந்து வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்றவையும், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, உடலை சுத்தம் செய்ய உதவியாக இருக்கும்.

மறுபுறம், ஆரஞ்சு பழம் மிகவும் சுவையான பழம். அதோடு அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழமும் கூட. ஆரஞ்சு பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களான இதய நோய், புற்றுநோய், இரைப்பைக் குடல் பிரச்சனை போன்றவற்றை எதிர்த்துப் போராடும். சரி, இப்போது கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று பார்ப்போம்.

எடைக் குறைப்பில் கேரட் கேரட்டில் டயட்டரி நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல் எடையைக் குறைக்கத் தேவையான மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த நார்ச்சத்து நல்ல செரிமானத்திற்கு உதவும் மற்றும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும். மேலும் கேரட் சுவை மொட்டுக்களை திருப்திப்படுத்தி, அளவுக்கு அதிகமான கலோரிகளை உணவு இடைவெளிகளுக்கு இடையே உட்கொள்வதைத் தடுக்கும்.

இந்த ஆரஞ்சு நிற காய்கறி உடலை சுத்தம் செய்வதோடு, செரிமான நொதிகளை சுறுசுறுப்பாக செயல்படச் செய்து, உடலில் கழிவுகளை வெளியேற்றும் திறனை மேம்படுத்தும். அதோடு கேரட் இயற்கையாக ஒரு சிறுநீர்ப்பெருக்கி என்பதால், இது சிறுநீரகங்களின் வழியே உடலில் இருந்து அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றத் தூண்டும்.

தொடர்ச்சி… கேரட்டில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகமாகவும், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இவை உடலின் கலோரிகளை எரிக்கும் திறனை மேம்படுத்தி, உடல் எடையை வேகமாக குறைக்கச் செய்யும். மேலும் கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6 போன்ற க்ளுக்கோஸ், கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன்களை உடைத்தெறியத் தேவையான வைட்டமின்கள் உள்ளன. இவை தசைகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதோடு, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்கச் செய்யும்.

எடை குறைப்பில் ஆரஞ்சு ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, பல்வேறு நோய்களைத் தடுக்கும். இந்த சிட்ரஸ் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளது. இவை செல்களை புதுப்பிக்கவும், இதய ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்யும். ஆரஞ்சு எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது? ஆரஞ்சு பழத்தில் அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து போன்ற உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்க உவும். மேலும் ஆரஞ்சு பழத்தில் பாஸ்பரஸ், பொட்டாசியம், தயமின், வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் போன்றவை அடங்கியுள்ளது.

கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸின் இதர நன்மைகள் கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் கலவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும், இதய நோயைக் கட்டுப்படுத்தும், கொலஸ்ட்ராலைக் குறைக்கும், இரத்தம் உறைவதைத் தடுக்கும், புற்றுநோயைத் தடுக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், தொற்றுக்களைக் குணப்படுத்தும், கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், வாய் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும், சரும ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

இந்த ஜூஸில் உள்ள ஆரஞ்சு இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும், புற்றுநோயைத் தடுக்கும், அல்சரைத் தடுப்பதோடு சரிசெய்யும், சிறுநீரக கற்களைத் தடுக்கும், மாரடைப்பின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் இரத்த சோகையை சரிசெய்யும்.

கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸை தயாரிப்பது எப்படி? தேவையான பொருட்கள்: * கேரட் – 2 * ஆரஞ்சு – 1 * எலுமிச்சை – 1 * இஞ்சி – 1-2 இன்ச் * தண்ணீர் – 1/4 கப்

செய்முறை: * முதலில் நீரில் கேரட் மற்றும் ஆரஞ்சு பழத்தைக் கழுவ வேண்டும். * பின் கேரட்டை துண்டுகளாக்கிக் ஜூஸரில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். * பின்பு ஆரஞ்சு பழத்தை இரண்டு துண்டுகளாக்கி, ஜூஸ் எடுத்துக் கொண்டு, இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். * பிறகு அதில் 1/4 கப் நீரை ஊற்றிக் கலந்து கொள்ள வேண்டும். * பின் அதில் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்கும் ஜூஸ் தயார்.

எச்சரிக்கை கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் கலவையை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது நிலைமையை மோசமாக்கும். சில சமயங்களில் இந்த ஜூஸை ஒருவர் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக குடித்தால், அதன் விளைவாக நெஞ்செரிச்சல், அதிகப்படியான அமில சுரப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

4 orange 1525071345

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button