அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

தோலின் நிறமாற்றத்தை போக்க இயற்கை முறையில் கிடைக்கும் ஸ்கின்டேன்

வெயில் காலம் வந்துவிட்டாலே, சிலருக்குத் தோலில் நிறமாற்றம் ஆரம்பித்துவிடும். ‘இதுக்காக, பார்லர் போக நேரம் இல்லையே’ என்கிற பெண்களுக்காக, எளிமையான ஸ்கின்டேன் பராமரிப்பு முறைகளை பார்க்கலாம்.
mh1 doey
வெயில் காலத்தில் நம் சருமத்தை புறஊதாக் கதிர்களிடமிருந்து காக்க, உடலில் மெலனின் அதிகமாகச் சுரக்கிறது. இதுதான் நிறமாற்றத்துக்கான முக்கிய காரணம். சரியான நேரத்தில் பாரமரிப்பு எடுத்துக்கொண்டால், இது எளிதில் சரிசெய்துவிடும் விஷயமே. எளிமையான பொருள்களைப் பயன்படுத்தியே சன் டேனிங்கை சரிசெய்துகொள்ளலாம்.

சோற்றுக்கற்றாழையை இரண்டாகக் கீறி, உள்ளே இருக்கும் நுங்கு போன்ற பொருளைத் தனியே எடுத்து, சுத்தமான தண்ணீரில் கழுவவும். பிறகு, மிக்ஸியில் போட்டு, பேஸ்ட் போன்று அரைக்கவும். முகம், கை, கால்கள், கழுத்து என நிறமாற்றம் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவிவிடவும். சன் டேன் காணாமல் போகும்.

சிறிதளவு காய்ச்சாத பால், பாதாம் நான்கு, கசகசா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். பாதாமை, தண்ணீரில் ஊறவைத்து, தோல் உரித்துக்கொள்ளவும். அதனுடன் கசகசா, பால் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து, டேனிங் ஏற்பட்டுள்ள இடங்களில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து கழுவிவிடவும். இப்படி தினமுமோ, வாரம் ஒரு முறையோ செய்தால் சன் டேனுக்கு டாட்டா சொல்லலாம்.

முல்தானிமெட்டி மற்றும் கேரட் ஜீஸை சமஅளவில் எடுத்து, 10 சொட்டு எலுமிச்சைசாறு கலந்து, டேனிங்கான இடத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிட்டால், சருமம் பழைய நிறத்தை அடைந்து பளபளப்பாக இருக்கும்.

வெயில் காலத்தில் கிடைக்கும் நுங்குடன், சிறிது இளநீர் சேர்த்து கலந்து, நிறமாற்றம் ஏற்பட்டுள்ள இடங்களில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ, டேனிங் பிரச்னையை எளிதில் நீக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button