முகப் பராமரிப்பு

முகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க..

சருமத் துளைகள் என்பது முகம் மற்றும் சருமத்தில் காணப்படும் மிகச்சிறிய துளைகளாகும். இது கண்ணுக்கு புலப்படாதவாறு மிகச்சிறிய அளவில் இருக்கும். ஆனால் சிலருக்கு முகத்தில் சருமத் துளைகள் விரிவடைந்து, கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். ஆனால் இப்படி கண்களுக்கு தெரியுமாறு சருமத் துளைகள் இருந்தால், அது ஒருவரது தோற்றத்தையே மோசமாக வெளிக்காட்டும். குறிப்பாக விரிவடைந்து காணப்படும் சருமத் துளைகள் முதுமைத் தோற்றத்தைக் கொடுப்பதோடு, முகத்தை பொலிவின்றி காட்டும்

இந்த சருமத்துளைகள் தான் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை முகத்தில் உண்டாக்குகின்றன. ஒருவரது வயது அதிகரிக்கும் போது, சருமம் தனது நெகிழ்வுத்தன்மையை இழந்து, நிலைமையை மோசமாக்கும். ஆனால் முகத்தில் விரிவடைந்து காணப்படும் சருமத் துளைகளை பல்வேறு வழிகளில் குறைக்க முடியும். இக்கட்டுரையில் முகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளை மறைக்க உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கற்றாழை கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி, சில நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். பின் 10 நிமிடம் கழித்து, நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகள் மறைந்துவிடும்.

முட்டையின் வெள்ளைக்கரு ஒரு பௌலில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, இந்த கலவையை முகத்தில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும். இதனாலும் சருமத் துளைகள் சுருங்கி மறைய ஆரம்பிக்கும்.

பப்பாளி தினமும் நன்கு கனிந்த பப்பாளி பழத்தின் ஒரு துண்டைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் சுருங்குவதோடு, சருமப் பொலிவும் மேம்படும்.

பேக்கிங் சோடா ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கடலை மாவு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் சில துளிகள் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள். அதன் பின் மாய்ஸ்சுரைசர் எதையேனும் மறக்காமல் பயன்படுத்துங்கள்.

வாழைப்பழம் வீட்டில் வாழைப்பழம் இருந்தால், அந்த பழத்தை சாப்பிட்ட பின், அந்த தோலின் உட்பகுதியால் முகத்தை மென்மையாக மசாஜ் செய்யுங்கள். அதன் பின் 20 நிமிடம் ஊற வைத்து, நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

வெள்ளரிக்காய் 4-5 துண்டு வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வையுங்கள். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த செயலாலும் முகத்தில் உள்ள குழிகள் மறையும்.

எலுமிச்சை ஒரு சிறிய பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, நீரால் கழுவ வேண்டும்.

முல்தானி மெட்டி 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 1-2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் அல்லது பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், சீக்கிரம் முகத்தில் உள்ள அசிங்கமான குழிகளைப் போக்கலாம்.

தயிர் 2 டேபிள் ஸ்பூன் தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் அசிங்க

skinpores 1525520243

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button