அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் தள்ளிப் போட உதவும்.

முதுமையை முறையான சரும பராமரிப்பினால் தடுக்க முடியும். மேலும் நமது பழக்கவழக்கங்களும் சருமத்திற்கு அழுத்தத்தை அதிகம் அழுத்தி, சுருங்க வழிவகுக்கும். அதுமட்டுமின்றி மன அழுத்தம், மாசுக்கள், சூரியக்கதிர்களின் நேரடித் தாக்கம் போன்றவற்றாலும் சருமம் வேகமாக முதுமைத் தோற்றத்தைப் பெறும்.201805120902403381 Prevent Wrinkles the Natural Way SECVPF

இப்படி சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் தள்ளிப் போட உதவும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.

* தேங்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்து, வறட்சி அடைவதை தடுத்து சருமம் சுருங்குவதை தடுக்கலாம்.

* கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் சரும செல்கள் உறிஞ்சி, முதுமை தோற்றத்தைப் பெறுவது தள்ளிப் போடப்படும்.

* விளக்கெண்ணெயில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் சருமம் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவதைத் தடுக்கும். அதற்கு விளக்கெண்ணெயைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்யுங்கள்.

* தினமும் இரவில் படுக்கும் போது ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவுங்கள். இதனால் முதுமை தள்ளிப் போடப்படும்.

* பாதாம் எண்ணெயிலும் வைட்டமின் ஈ உள்ளது. இந்த எண்ணெயைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலும், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button