32.1 C
Chennai
Sunday, May 11, 2025
cheese bonda
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

சீஸ் போண்டா

தேவையான பொருட்கள்

  • மக்ரோனி ட்யூப்கள் – ஒரு கப்
  • எலும்பு நீக்கிய கோழிக்கறி – ஒரு கப்
  • உருளைக்கிழங்கு – 150 கிராம்
  • துருவிய சீஸ் – ஒரு கப்
  • முட்டை – 2
  • இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
  • மசாலாத் தூள் – ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
  • மிளகுத் தூள் – 2 மேசைக்கரண்டி
  • பிஸ்கட் தூள் – 2 கப்
  • உப்பு – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் -பொரிப்பதற்கு

cheese bonda

மக்ரோனி மற்றும் உருளைக்கிழங்கைத் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
எலும்பு நீக்கிய கோழிக் கறியை மசாலாத் தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகுத் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.

முட்டையை உடைத்து ஒரு பவுலில் ஊற்றி, பீட்டரால் அல்லது கரண்டியால் நன்கு அடித்துக் கொள்ளவும். வேக வைத்த மக்ரோனி மற்றும் உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும்.

மசித்த கலவையுடன் வேக வைத்த கோழிக் கறி மற்றும் துருவிய சீஸை சேர்க்கவும்.
இவையனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி, கலக்கிய முட்டையில் தோய்த்து பிஸ்கட் தூளில் பிரட்டியெடுத்து ஃப்ரீசரில் சுமார் 4 மணி நேரம் வைக்கவும்.

பிறகு ஃப்ரீசரிலிருந்து எடுத்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான குஜராத்தி சீஸ் போண்டா தயார். கறி சாஸ் அல்லது கெட்சப்புடன் பரிமாறவும்.

Related posts

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

sangika

சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan

அரைத்தமாவு தட்டை

nathan

மணக்கும் மாலை நேர நொறுவை! – மசாலா கடலை

nathan

புளி சாதம் எப்படிச் செய்வது?

nathan

ஈஸி வெஜ் கட்லட்

nathan

சொதி

nathan

ராம் லட்டு

nathan

சுவையான மிளகு வடை ரெடி….

sangika