மருத்துவ குறிப்பு

நீங்கள் ஃப்ளூ காய்ச்சலில் இருந்து பாதுகாப்பாக இருக்கின்றீர்களா?

இன்றைய கால கட்டங்களில் தென் மாகாணத்தில் பரவிவருகின்ற வைரஸ் காய்ச்சல் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இக்காய்ச்சலில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள இதைப்பற்றி அறிந்திருப்பது அவசியமானதாகும்.

ஃப்ளூ காய்ச்சல் என்று பொதுவாக அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்சா என்பது ஒரு வைரஸ் காய்ச்சல். இது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளைத் தாக்குகிறது.
இக்காய்ச்சல் இன்ஃப்ளூயன்சா வைரஸ், அடேனோ வைரஸ், மற்றும் நாக்சோக் பாக்டீரியா ஆகிய மூன்று வகையான வைரஸ்களினால் பரவுகின்றது. மூச்சுக் குழல் எனப்படும் சுவாசக் குழலைப் பாதிக்கும் மற்ற வைரஸ்களைவிட இன்ஃப்ளூயன்சா வைரஸ், தீவிரமாக நோய்க்கிருமிகளையும், சிக்கல் நிறைந்த நோய்த்தன்மையையும் கொண்டது.

இந்த இன்ஃப்ளூயன்சா வைரஸ் சீரான முறையில் வளர்ந்து சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தொற்று நோய்ப் பரவலை ஏற்படுத்தக் கூடியது. ஏனைய வைரஸ்கள் சிறு சிறு உபாதைகளை தோன்றுவித்து மறையும்.

யாரை தாக்கும்

இன்ஃப்ளூயன்சாவிற்கு வயது வித்தியாசமோ, வயது வரம்போ கிடையாது. பொதுவாக குளிர்காலத்திலேயே இந்தவகை வைரஸ் காய்ச்சல் தொற்றக்கூடியது.

பரவும் முறை

இந்த காய்ச்சல் ஏற்பட்டோரின் இருமல், சளி ஆகியவை மூலம் இது பிறருக்கும் தொற்றுகிறது.

நோய் நிலமைகள்

முதலில் அதிக காய்ச்சல், குளிர், வேர்வை, தசை வலி மற்றும் தலைவலி போன்ற தொடக்க அறிகுறிகள் ஏற்படும்.

தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை கட்டு மற்றும் சூரிய ஒளிக்கு ஒத்துக் கொள்ளாமல் கண்ணீர் வழியும்

இவ் தீவிர அறிகுறிகள் சாதாரணமாக 3 அல்லது 5 நாட்களுக்கு நீடிக்கும், பொதுவாக 48 மணி நேரத்தில் நோய்க்கிருமிகள் அதிகரிக்கத் தொடங்கும்.

ஃப்ளூ வைரஸ்களால் கூடுதலாக, எலும்பு உட்புழை, காது மற்றும் மூச்சுக்குழல்களில் தொற்றை ஏற்படுத்துகின்றன. சில சமயம் ஃப்ளூவால் நியுமோனியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

பிரதான அறிகுறிகள்

* 104 டிகிரி வரை காய்ச்சல்
* தலைவலி
* மூக்கிலிருந்து தண்ணீர் போல் சளி வருதல்

* இருமல்
* மூச்சு விடுதலில் சிரமம்
* நடுக்கம்
* தளர்ச்சி
* வியர்வை
* பசியின்மை

* தொண்டைக்கட்டு

சிகிச்சை

நோய் அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக வைத்தியரிடம் அழைத்துசெல்ல வேண்டும்.

இது சாதாரண ஃப்ளூ காய்ச்சலாக இருந்தால் மருத்துவர்கள் காய்ச்சல் எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்து கட்டுப்படுத்துவர்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், வயதானவர்கள், இருதயம், நுரையீரல் மற்றும் கிட்னி ஆகியவற்றில் நீண்ட நாளைய பழுது இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் இருப்பது 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டால் அமான்டடின், ரிமான் டடின் ஆகிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்படும்.

குழந்தைகளுக்கு ஆஸ்ப்ரின் கொடுக்கக் கூடாது, ஏனெனில் இது ஆபத்து மிகுந்தது. ஆஸ்ப்ரினுக்கும் புது வகை ஃப்ளூவிற்குமான தொடர்பு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உணவு

தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் அவசியம்.

அதிக திரவங்களை உட்கொண்டால் எலும்பு உட்புழை மற்றும் நுரையீரலில் உள்ள சளிச்சவ்வு மெலிதடைந்து உடலிலிருந்து விரைவில் வெளியேறும்.

தொற்றை தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை?

பொதுவாக இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை குறைக்காமல் அதன் முழுக்காலத்தை கடக்கவிடுவதே சிறந்தது, ஆனால் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சிகிச்சை அவசியம் தேவை.

இது பிறருக்கு தொற்றாமல் இருக்க பாக்டீரியா – தடுப்பு சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுதல் நலம்.

நோய் பரவும் பிரதேசங்களில் உள்ளவர்கள் வாய் கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

அவதானம்

நீண்ட நாள் இருதய, கிட்னி மற்றும் நுரையீரல் நோய் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் மேலும்ஆபத்தானதாக மாறுவதற்குக் கூட வாய்ப்புகள் அதிகம்.

உடல் உறுப்புகளில் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா தாக்கினால், மேலும் சிக்கல் நிறைந்த நோய்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.influenza

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button