அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

அழகுக்கும் ஆரோக்கியத்துக்குமான சீக்ரெட்..

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டிய மூலிகைப் பட்டியலில், கற்றாழைக்கும் இடம் உண்டு. கிராமத்து வரப்போரங்களிலும், காய்ந்த, வறட்சியான நிலத்திலும் சர்வ சாதாரணமாகக் காட்சியளிக்கும் கற்றாழை, நம் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தருகிறது. அதன் நன்மைகளையும் பலன்களையும் பட்டியலிடலாமா?
maxresdefault 5
சாப்பிட்டால்…

200 கிராம் கற்றாழையைத் தோல் சீவி, ஏழு முறை நீரில் நன்றாக அலசவும். பிறகு, அதை மிக்ஸியில் போட்டு, நன்கு அரைக்கவும். அதனுடன் 200 கிராம் பனைவெல்லம், 15 கிராம் பூண்டு விழுது, 25 கிராம் வறுத்த வெந்தயப் பொடி சேர்த்து, அல்வாபோல கிண்டி எடுக்கவும். இந்த லேகியத்தை ஆறு மாதங்களுக்கு, காலை, மாலை என இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவர மாதவிலக்கின்போது அதிக வயிற்றுவலி, பி.சி.ஓ.டி, சீரற்ற மாதவிலக்கு, ஆரம்பகால மாதவிலக்குப்  பிரச்னைகள், கர்ப்பப்பையில் கட்டி போன்ற அனைத்தும் சரியாகும்.

கற்றாழையை நன்றாகக் கழுவி, தொடர்ந்து சாப்பிட்டுவர, கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளின் வீரியம் குறைந்து, படிப்படியாகச் சரியாகும்.

உடல் உஷ்ணம் இருப்பவர்களும், கற்றாழை லேகியத்தைச் சாப்பிடலாம். குளிர்ச்சித் தன்மையுள்ள உடல்வாகு கொண்டவர்கள், ஃபிரெஷ்ஷான கற்றாழை ஜூஸ் குடிப்பதைத் தவிர்க்கலாம்.

மூலம் இருப்பவர்களுக்கும், மலத்துடன் ரத்தம் வெளியேறும் பிரச்னை இருப்பவர்களுக்கும் கற்றாழை மிக நல்லது.

வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்து, வயிற்றின் இயக்கத்தைச் சீராக்க உதவும். இது நச்சுநீக்கியாகவும் செயல்படும்.

கெட்ட கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

உடலில் பூசினால்…

கற்றாழையைத் தோல் சீவி நன்கு கழுவி, அதன் சதைப்பகுதியை மஞ்சள்தூளில் புரட்டி எடுத்து, தோசைக்கல்லில் லேசாக சூடு செய்ய வேண்டும். சூடு ஆறிய பிறகு, கட்டிகளின் மேல் வைத்துக் கட்டலாம்.

ஆரம்பகட்டத்தில் உள்ள கட்டிகளாக இருந்தால், உடனே அமுங்கிவிடும். கொஞ்சம் பெரிய கட்டிகள் என்றால், சீக்கிரம் பழுத்து,  உடைவதற்கும் உதவும்.

சருமத்தில் வரக்கூடிய சூட்டுக்கட்டிகளை நீக்கும். பெண்களுக்கு அந்தரங்க உறுப்புகளில் வரக்கூடிய சிறு சிறு கட்டிகளை `ஃபாலிக்குலைட்டிஸ்’ (Folliculitis) என்பர். இவற்றைக் குணப்படுத்தும் சக்தி கற்றாழைக்கு உண்டு.

சிறு தீக்காயங்கள் ஏற்பட்டால், அந்தக் காயங்களை நன்றாகத் தண்ணீரில் காட்டிய பிறகு, கற்றாழையைப் பூசி வர, எரிச்சல் நீங்கும். காயமும் ஆறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button