32.4 C
Chennai
Monday, May 12, 2025
ஆரோக்கிய உணவு

பருப்பு கீரை சாம்பார்

 

பருப்பு கீரை சாம்பார்

பருப்பு கீரை சாம்பார் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-

பருப்பு கீரை-1 கட்டு,
துவரம் பருப்பு-200 கிராம்,
புளி, உப்பு, எண்ணெய்-தேவையான அளவு,
வத்தல், மிளகாய்- தலா 4 எண்ணிக்கை,
தக்காளி-5,
சீரகம்-1½ தேக்கரண்டி,
வெந்தயம், கடுகு, உளுந்தம் பருப்பு-தலா 1 தேக்கரண்டி,
தேங்காய் துருவல்- தேவையான அளவு,
கறிவேப்பிலை, சாம்பார் பொடி- சிறிதளவு.

செய்முறை:-

• கீரை, பருப்பை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

• பருப்பை தேவையான தண்ணீரில் வேகவிட வேண்டும்.

• அம்மியில் வத்தல், உப்பு, புளி, சீரகம், தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

•  வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• பருப்பு வெந்ததும் கீரையை அதில் கொட்டி, வேக விட வேண்டும்.

• சற்று நேரம் கழித்து, அரைத்து வைத்திருந்த விழுதை அதில் சேர்த்து கிளறுங்கள்.

• நன்றாக கொதித்து கொண்டிருக்கும் போது, வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை போட வேண்டும்.

• தேவைக்கு ஏற்ப சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

• நன்றாக கொதித்ததும் வேறு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கினால், பருப்பு கீரை சாம்பார் தயார் ஆகிவிடும்.

Related posts

கிச்சன் கிளினிக் – உணவே விருந்து உணவே மருந்து

nathan

காய்கறிகளை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

தூங்கும் முன்பு இந்த உணவை மறந்தும் எடுத்துக்காதீங்க! தெரிஞ்சிக்கங்க…

nathan

கறிவேப்பிலையை, தொடர்ந்து, 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள்… !

nathan

புரதச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிள் சூப்

nathan

ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

nathan

எலும்பை பலவீனப்படுத்தும் உணவுகள்

nathan

ஜீரணத்தை எளிதாக்கும் ஸ்பெஷல் சீரக மோர் -தெரிஞ்சிக்கங்க…

nathan

கோடைக்கு ஏற்ற “நுங்கு பானம்”

nathan