அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

உடலில் ஏற்படும் காயங்கள், பெண்களின் கர்ப்பக்காலத்தில் வயிற்றின் விரிவு மற்றும் உடல் பருமன் அதிகரித்தல் போன்ற காரணங்களால் ஏற்பட்ட  தழும்புகளை மறையச்செய்யலாம்.

கைமருத்துவத்தினூடாக இதன் பாதிப்பை குறைக்க அல்லது தழும்புகளை மறையச்செய்யலாம். கீழே தரப்பட்டுள்ள களிம்மை செய்து நீங்களும் முயற்சித்து பார்க்கலாம். கோப்பி மற்றும் தேங்காய் எண்ணையுடன் தயாரிக்கப்பட்ட இக்களிம்பு உடலின் வெளிப்புற உபயோகத்திற்கு மட்டும் பொருந்தும். இது உங்கள் உடலில் அனைத்து பாதிக்கப்பட்ட தோலிற்கும் ஊட்டமளிக்கிறது.

397bbf398f4db2a9ab08fd2b7252c2ec

களிம்பு செய்யும் முறை

கோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயுடன் இந்த இயற்கை வகையில் களிம்பு செய்வதற்கு முழுமையான இயற்கை பொருட்களை வாங்க வேண்டும்.

தேவையான பொருட்கள்

• 5 தேக்கரண்டி அரைக்கப்பட்ட கோப்பி கொட்டைகள் (75 கிராம்)
• 3 தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய் (45 கிராம்)
• 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் (15 கிராம்)
• 2 தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட நீர் (30 மிலி)
• மூடி கொண்ட கண்ணாடி பாத்திரம்
• மர கரண்டி

செய்முறை
ஒரு கண்ணாடி பாத்திரத்தினுல் அரைத்த கோப்பித்தூள், தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு மரக் கரண்டியால் மென்மையாக வரும்வரை கலக்குங்கள். குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் பாத்திரத்தை இருக்க மூடி வையுங்கள்.

பயன்படுத்தும் முறை
வடுக்கள் /தழும்புகள் உள்ள பகுதிகளில் பாதிப்பு அளவை பொறுத்து இந்த களிம்பை நன்கு தேய்க்கவும். ஐந்து நிமிடங்கள் மென்மையான மசாஜ் செய்து, பின்னர் அதை மற்றொரு 20 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதை வாரத்துக்கு 2 முறை அல்லது நேரம் கிடைத்தால் தினமும் கூட செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button