மருத்துவ குறிப்பு

நம் உடலில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி?

நம் உடலில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி?
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.• பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.• செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.• முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

• நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

• இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

• தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

• இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளலாம். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது. இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம்.

• தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

• விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

• அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும். இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.

Related posts

கருப்பை பிரச்சனையால் அவதியா இலந்தை இலை

nathan

இளம் வயதில் ஆண்மை குறைவு ஏன் ஏற்படுகின்றது?

nathan

குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன?

nathan

ஆயுள் முழுவதும் தைராய்ட் மாத்திரை சாப்பிட தேவையில்லை -தெரிந்துகொள்வோமா?

nathan

சூப்பரா பலன் தரும்!! ஆஸ்துமாவை விரட்டும் மூலிகை..!!

nathan

நாக்கில் வெண்படலம் தீர்வு என்ன?

nathan

இன்றைய பெண்களுக்கு வரும் அபாயகரமான நோய்கள்

nathan

ஜாக்கிரதையா இருங்க… உங்களுக்கு இப்படி அடிக்கடி வருதா?… அப்போ அந்த நோயா இருக்கலாம்…

nathan

உங்களுக்கு இரவில் வறட்டு இருமல் அடிக்கடி வருதா? சூப்பர் டிப்ஸ்…..

nathan