அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முதிர்ந்த வயதிலும் உங்கள் சருமத்தை இளமையுடன் தோன்ற வைக்கலாம்’ என்கிறார் சரும நிபுணர்

கல்லூரி நாள் தொடங்கி அதே ஃபேஸ் வாஷ் மற்றும் மாயிஸ்சரைப் பயன்படுத்தி வருகிறோம்.  வயது அதிகரிக்கும் போது நமது சருமமும்  மாறுதலுக்கு உள்ளாகும் என்பது முக்கியம்.  20களில் சரியாக இருந்தது 30 அல்லது 40களில் இருக்காது.  சருமத்தைப் பளபளப்பாகவும்,  ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது நமது இலக்கு எனில் உங்கள் சருமப் பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் கணிசமான மாற்றங்களை  ஏற்படுத்த இதுவே சரியான தருணம்.  truques beleza caseiros rosto

நீங்கள் 20களில் இருந்தால்…

உங்கள் 20களில் நீங்கள் எவ்வாறு சருமத்தின் மீது கவனம் செலுத்திப் பாதுகாக்கிறீர்களோ அதுவே உங்கள் முதிர்ந்த வயதில் தோற்றமளிப்பதை  உறுதிப்படுத்தும். சருமத்தைப் பாதுகாப்பதும், பராமரிப்பதுமே உங்கள் இலக்காக இருக்கும்.  தினசரி உங்கள் முகத்தை இரு முறை நன்றாகக் கழுவ  வேண்டும்.  உங்களுக்கு உலர் சருமம் எனில், ஈரப்பதத்தை உருவாக்கும் சருமப் பொருட்களைத் தேர்ந்தெடுத்துச் சருமத்தின் இயற்கை ஈரப்பதத்தைப்  பராமரியுங்கள்.

எண்ணெய்ப் பிசுக்கு அல்லது முகப்பரு சருமமாக இருப்பின், சாலிசைலிக் அமிலம் அல்லது ஏஹெச்ஏ உள்ள சருமப் பொருட்களைப் பயன்படுத்திச்  சருமத்தின் மீதுள்ள திசுப் படலத்தையும், துவார அடைப்புகளையும் நீக்கலாம். மென்மையான சருமம் எனில் அதிக நறுமணம் இல்லாத / சரும நிபுணர்  பரிந்துரைக்கும் சருமப் பொருட்களையும், யுவிஏ மற்றும்  யுவிபி பாதுகாப்பு உள்ள சன் ஸ்க்ரீனையும் பயன்படுத்துங்கள்.

உங்கள் 20களில் ஆரோக்கியத்தின் மீதான கவனம் அதிகமிருக்க வேண்டும் என்பதால் தொடர் உடற்பயிற்சியுடன் ஈரப்பதத்துடன் இருப்பதும் அவசியம்.   உங்கள் சருமம் எத்தகையது மற்றும் உங்களுக்கு ஏற்ற வழிமுறைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளச் சரும நிபுணரைச் சந்தியுங்கள்.  உங்கள்  சரும வகையைப் பொருத்து க்ளீன் அப் மற்றும் மெடி ஃபேஷியலைத் தொடங்கும் நேரமிது.

நீங்கள் 30களில் இருந்தால்…   

இந்த வயதில் சூரியக் கதிர்களால் நிறமாற்றம் ஏற்படுவதும், கோடுகள் விழுவதும் மிகப் பெரிய சருமப் பிரச்சனைகளாகும். சருமத்தின் மீதுள்ள திசுப்  படலத்தை அகற்றாவிட்டால், உங்கள் சரும  இளமையாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கும். பகல் மற்றும் இரவுகளில் கண்களுக்கான க்ரீமைத்  தடவிக் கொள்வதன் மூலம் கண்களைச் சுற்றியுள்ள சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். இதனால் கண்களைச் சுற்றி ஏற்பட்ட கோடுகள் மறையத்  தொடங்கும்.

பகல் நேரத்தில் சன் ஸ்க்ரீன் தடவிக் கொள்வதற்கு முன்பு ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமுள்ள மாயிஸ்சரைசர், சீரம் அல்லது லோஷனைத் தடவிக்  கொள்ளுங்கள். ரெடினாயிட் தடவிக் கொள்வதன் மூலம் சருமத்தின் ஒட்டு மொத்த மென்மையும் அதிகரிக்கும்.  ஹையலூரானிக் அமிலம் சருமத்தை  மிருதுவாக்கும். கோஜி பெர்ரி மற்றும் வைட்டமின் சி ஆகிய ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சருமத்தின் வயது முதிர்ந்த தோற்றத்தைத் தடுக்கும்.   க்ளைகாலிக் அமிலம் இறந்த சரும அணுக்களை அகற்றி சருமத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டும்.

நீங்கள் 40களில் இருந்தால்…

புருவங்களுக்கு இடையேயும், கண்கள் மற்றும் வாய்ப் பகுதியைச் சுற்றியும் கோடுகள் தோன்றி இருக்கின்றனவா என்பதைக் கவனிக்கும் நேரமிது.   கழுத்து மற்றும் கழுத்துக்குக் கீழேயும் சுருக்கங்கள் தோன்றினால் மாயிஸ்சர் மற்றும் பெப்டிடைட் உள்ளிட்ட கொலேஜனை உருவாக்கும் கூட்டுப்  பொருட்களைப் பயன்படுத்துங்கள். ஃபோமிங் இல்லாத, ட்ரையிங் இல்லாத க்ளென்ஸருடன் மென்மையான ஃபேஸ் க்ளென்ஸிஸ்ங்க் ப்ரஷ் மூலம்  இறந்த சரும அணுக்களை அகற்றுங்கள். ரெடினாலைத் தொடர்ந்து பயன்படுத்துபவராக இருப்பின் சருமம் உரிதலைத் தடுக்க வேண்டியிருக்கும்.

சரும நிபுணரைச் சந்தித்து உங்கள் சருமத்துக்கு ஏற்ற மற்றும் சிறந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். வயது முதிர்வைத் தடுக்கும் முறையான மெடி  ஃபேஷியல் இளமையில் சருமம் சுருங்குவதைத் தடுத்து உறுதியாக்கும்.  சுருக்கங்களுக்கு பொடோலினம் டாக்ஸின் சிகிச்சை ஏற்றதாகும்.  சுருக்க  ஃபில்லர்கள் மூலம் கோடுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். அறுவை சிகிச்சை ஏதுமின்றி வயது முதிர்வைத் தடுத்து உங்களை இன்னும் இளமையாகத்  தோன்ற வைக்கலாம். பிரத்யேக ஒளி அல்லது லேசர்கள், ரசாயன பீல் அல்லது மைக்ரோடெர்மாபிராஷன் மூலம் சருமம் கருமையாதலைத் தடுத்து  நிறத்தை மேம்படுத்தலாம்.

தலைமுடி குறைதலைத் தடுக்க தலைமுடி மாற்று சிகிச்சை மேற்கொள்ளலாம். எனவே வயது முதிர்தல் மற்றும் சருமப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு  இடையேயான உறவைப் புரிந்து கொள்வது முக்கியம்.  உங்கள் பதின்பருவ வயதிலும், 20களிலும் செய்தது 40கள், 50கள் மற்றும் 60களில்  சருமத்தைப் பாதிக்கும்.  செய்ததும், செய்யாததும் உங்கள் தோற்றத்தின் மீது மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும். என்றென்றும் இளமையாகத்  தோற்றமளிக்க இன்றே இவற்றைத் தொடங்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button