உடல் பயிற்சி

கைகளுக்கு வலிமை தரும் பைசெப்ஸ் கர்ல்ஸ் பயிற்சி

கைகளுக்கு வலிமை தரும் பைசெப்ஸ் கர்ல்ஸ் பயிற்சி
நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு சிறந்த வழி உடற்பயிற்சி தான். ஒருவரின் உடல்வாகு படி உடற்பயிற்சிகளை செய்து வந்தால், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிக்கலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கவும், வலுவாக இருக்கவும் நாம் பல உடற்பயிற்சியில் ஈடுபடுகிறோம்.ஆனால் ஒவ்வொரு அங்கமும் வலுவடைய அதற்கென தனித்தனியாக உடற்பயிற்சிகள் இருக்கிறது. நம் கைகள் வலுவடையவும், தேவையற்ற எடையை குறைக்கவும், அதற்கென பல உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். சீரான முறையில் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் கூட, பலருக்கு வலுவான கைகள் கிடைப்பதில்லை.உடற்பயிற்சியை பொறுத்த வரை, பலமான பொருட்களை ஜிம்மில் தூக்கி பயிற்சி செய்தால் கைகளின் எடையை குறைக்கலாம். கைகளுக்கு நல்ல வலிமை தர பைசெப்ஸ் கர்ல்ஸ் Biceps Curls பயிற்சி மிகவும் சிறந்தது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நின்று கொள்ளவும்.பின்னர் இரண்டு கைகளிலும் டம்ப் பெல்ஸை எடுத்துக் கொண்டு, நின்ற நிலையில் இந்த பயிற்சியை தொடங்க வேண்டும். உங்கள் உடலை நேராக வைத்துக் கொண்டு உள்ளங்கையை மேல் நோக்கி நீட்ட வேண்டும். பின் மெதுவாக முழங்கையை மடித்து, கைகளை மெதுவாக சுழற்ற வேண்டும். இப்படி செய்வதால் கைகளில் உள்ள பைசெப்ஸ் தசை பிதுங்கி நிற்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்யும் போது, முழங்கைகள் உடலின் பக்கவாட்டில் ஒட்டியும் வைக்க வேண்டும். இந்த நிலையை ஒரு நொடிக்கு வைத்திருந்து, பின் மெதுவாக எடையை கீழிறக்கி ஆரம்பித்த நிலைக்கு திரும்புங்கள்.

இவ்வாறு ஆரம்பத்தில் 15 முதல் 20 முறையும் பின் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து அதற்கு மேலும் செய்யலாம். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்யும் கைகளிலும், தோள்பட்டையிலும் வலி இருக்கும். பின்னர் படிப்படியாக சரியாகிவிடும்.

Related posts

தொப்பை குறைய 4 வழிகள் !

nathan

இளமையிலேயே நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம்

nathan

வீட்டிலேயே நடைப்பயிற்சி

nathan

குரூப் வொர்க் அவுட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

nathan

உடலையும் உறவையும் வலுப்படுத்தும் ஜோடி ஃபிட்னஸ் தெரியுமா?..

sangika

வலிமை தரும் பயிற்சி

nathan

பெண்களின் நோய் தீர்க்கும் அர்த்த சர்வாங்காசனம்

nathan

பெண்கள் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க வழிகள்

nathan

உடல் எடையை குறைக்கும் வெண்பூசணிக்காய் சாறு

nathan