மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கர்ப்ப காலத்தில் மூசு முட்டுவது போல் உணர்வது ஏன்?ச்

கர்ப்ப காலத்தில் அடிக்கடி மூச்சு நின்று போவதுபோல சிலர் உணர்வார்கள். இது இயல்பானதுதான். கருப்பையிலுள்ள குழந்தையானது கார்பன் டை ஆக்சைடை உருவாக்கி, பனிக்குடம் வழியாக அதை ரத்த ஓட்டத்துக்குள் கடத்துகிறது.

அதை வெளியேற்றுவதற்காக கர்ப்பிணியின் உடல் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும், கர்ப்ப காலத்தின் கடைசி நாட்களில், கருப்பையானது உதர விதானத்தை மேல் நோக்கித் தள்ளுவதால், நுரையீரல் விரிவடைவதற்குப் போதுமான இடமில்லாமல் போய்விடும். இதனால் குறிப்பிட்ட அளவு காற்றை சுவாசிக்க இயலாத நிலை ஏற்படுவதாலும் சுவாசத் தடை ஏற்படுகிறது.

இருமல், மார்பில் வலி அல்லது தொடர்ச்சியான களைப்பு போன்றவற்றுடன் மூச்சு நின்றுபோகிற உணர்வும் ஏற்படுமானால் கர்ப்பிணிகள் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம். ஆஸ்துமா இருந்தால், அது நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியதும் அவசியம்.

கர்ப்ப காலம் முழுவதும் மருத்துவரின் ஆலோசனையுடன் இன்ஹேலர்களைப் பயன்படுத்தலாம். ஆஸ்துமா பாதிப்பு தீவிரமடைந்தால் அது குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜன் அளவைக் குறைத்து விடுவதோடு, ஆபத்தாகவும் முடியும். எனவே, இந்த விஷயங்களில் கர்ப்பிணிகள்தான் கவனமாக இருக்க வேண்டும்.breathing problem during pregnancy

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button