ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இதய நோய், பக்கவாதத்தை தவிர்க்கும் முட்டை

தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாத தாக்குதல் குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

இதய நோய், பக்கவாதத்தை தவிர்க்கும் முட்டை
தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாத தாக்குதல் குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 30 முதல் 79 வயதுக்குட்பட்ட 5 லட்சம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். அதன்படி தினமும் உணவில் முட்டை சேர்த்துக்கொண்டால் இதய நோயால் 18 சதவீதமும், ரத்த கொதிப்பு, பக்கவாத நோய் பிரச்சினையால் 28 சதவீதமும் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.

இதய நோய்தான் உலக அளவில் அதிக உயிர்பலி வாங்கும் மூன்றாவது நோயாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இதய நோய் பாதிப்புக்குள்ளாகிறவர்களில் 18 சதவீதம் பேர் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் மரணமடைகிறார்கள். முட்டையில் அதிக அளவு கொழுப்பு நிறைந்திருக்கிறது. அவற்றை அதிக அளவு உட்கொள்வது உடல் நலனுக்கு கேடானது. அதேவேளையில் வைட்டமின்களும், புரதங்களும் உள்ளடங்கி இருக்கிறது. அதனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது.

சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்டவற்றுள் பெரும்பாலான ஆய்வு முடிவுகள் முட்டையை அளவோடு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்பதையே தெளிவுபடுத்தியுள்ளன.15 1473921508 egg4

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button