ஆரோக்கிய உணவு

உலர்திராட்சை ஊறவெச்ச தண்ணிய வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வாங்க… சூப்பர் டிப்ஸ்

பண்டிகை நாள் என்றாலே பாயாசம் செய்யாமல் இருக்க மாட்டோம். பாயாசம் என்றாலே கண்டிப்பாக அதில் உலர் திராட்சை பழம் போடாமல் செய்ய மாட்டோம். நிச்சயம் இருக்கும். ஏனென்றால் இந்த உலர் திராட்சை பழங்களின் சுவை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.

இந்த உலர்ந்த திராட்சை பழ தண்ணீர் நமக்கு ஏராளமான நன்மைகளையும் அள்ளித் தருகிறது. நமது உடலில் இருக்கும். அதிகப்படியான சூட்டை குறைத்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. அதுமட்டுமா இந்த கிஸ்மிஸ் பழம் நம் இதயத்திற்கும் நல்லது. குழம்பிடாதீங்க… நம்ம வீட்ல பயன்படுத்துற உலர் திராட்சை பழம் தான் நிறைய இடங்களில் கிஸ்மிஸ்னு சொல்லப்படுது.

உலர்ந்த பழங்கள் கிஸ்மிஸ் பழமான இது உலர்ந்த பழங்களின் பட்டியிலில் இடம் பெறுகிறது. இதய நோய்கள் மற்றும் கல்லீரல் பிரச்சினை போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி இதில் உள்ளது. மேலும் உடம்பில் கெட்ட நச்சுக்களை வெளியேற்ற கூடியது. இந்த உலர்ந்த திராட்சை பழ தண்ணீரை தயாரிப்பது மிகவும் சுலபம்

ஊட்டச்சத்து அளவுகள் உலர்ந்த திராட்சைப் பழங்கள் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இந்த தண்ணீரில் விட்டமின்கள், தாதுக்கள், புரோட்டீன், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், நியசின், விட்டமின் பி6, சி, கே, நார்ச்சத்து போன்றவைகள் உள்ளன.

கிஸ்மிஸ் வாட்டர் 2 கப் தண்ணீரில் 150 கிராம் உலர்ந்த திராட்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை சூடு செய்து இரவு முழுவதும் அப்படியே வைத்திருங்கள். காலையில் எழுந்ததும் அதை வடிகட்டி மிதமான தீயில் லேசாக சூடுபடுத்தி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். அரை மணி நேரம் வரை எதுவும் சாப்பிடாமல் இருக்கவும்.

சீரண சக்தி இந்த உலர்ந்த திராட்சை தண்ணீர் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும். வயிற்றில் உள்ள நல்ல அமிலத்தை நன்றாக சுரக்க செய்து உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை நன்றாக உறிந்து கொள்ளச் செய்யும். இது நம்முடைய சீரண சக்தியை அதிகரிக்கிறது.

கல்லீரல் சுத்தம் இது கல்லீரலில் ஒரு பயோ வேதியியல் விளைவை உண்டாக்கி அங்குள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும். எனவே கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இது பெரிதும் நல்லது.

அமிலத் தன்மை வயிற்றில் சில நேரங்களில் அதிக அமிலத் தன்மை காரணமாக நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த கிறிஸ்மஸ் பழ தண்ணீர் வயிற்றில் சுரக்கும் அமிலத் தன்மையை குறைக்கிறது. இதற்கு அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் காரணமாக அமைகின்றன. எப்பொழுதும் அமிலத்தை சமநிலையாக வைத்திருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி கிறிஸ்மஸ் பழ தண்ணீரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. நீங்கள் இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பட்டு நோய்கள் எதுவும் உங்களை அண்டாது. எனவே எளிதான இந்த உலர்ந்த திராட்சை பழ தண்ணீரை குடித்து நீண்ட காலம் நலமாக வாழுங்கள்

2 1531478642

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button