ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சிக்கென்று இடுப்பை வைத்து கொள்ள

காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.

வாழைத்தண்டு, பூசணிக்காய் இவற்றுக்கு உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம். எனவே, ஒரு நாள் வாழைத் தண்டு சாறு, மறுநாள் பூசணிக்காய் சாறு என்று மாற்றி மாற்றி வெறும் வயிற்றில் அருந்தலாம்.

article 1347777 0CB8DA01000005DCநீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுவதும் தவிர்க்கவும். வேக வைத்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், வாழைப்பழம், ஆரஞ்சு, மாம்பழம் உள்ளிட்ட நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளவும்.

தினமும் உணவில் 2 டீஸ்பூன் ‘கொள்ளு’ சேர்ப்பது, உடலில் அதிக கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button