மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கிட்னியை சுத்தம் செய்யும் 9 மூலிகைகள்…

நம்மில் அதிக பேர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையே ஏதோ வேண்டா வெறுப்பாக செய்கின்றோம். தண்ணீர் அதிகம் குடிக்கவில்லை என்றால் அது உங்கள் கிட்னியை பெரிதும் பாதிக்கும். கிட்னி சரியாக வேலை செய்யவில்லை என்றால் உங்கள் ஜீரண மண்டலம் பாதிப்படைந்த, உணவு சாப்பிட முடியாத அளவிற்கு பல உடல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தும்.

அத்தோடு உயிரையும் கேள்விக்குறியாக மாற்றிவிடும். இப்படி ஒரு புறம் இருக்க தேவையற்ற, சீக்கிரம் ஜீரணம் ஆகாத உணவு பொருட்களை சாப்பிடுவதால் கிட்னியில் அதிக அழுக்குகள் படிய ஆரம்பித்துவிடும். கடைசியில் கிட்னி செயலற்று போக இது ஒரு பெரிய காரணமாக இருக்க கூடும். சரி, இதனை சரி செய்ய ஏதேனும் வழி இருக்கிறதா..? ஆமாங்க, வழி இருக்கிறது. அதனை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

#1 மஞ்சள் அதிக ஆன்டி-செப்டிக் தன்மையை இயற்கையாகவே கொண்டுள்ள இந்த மஞ்சள் உடல் சம்பந்தமான பல நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் திறன் பெற்றது. மேலும் இது உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்க வல்லது. அதனால் இது உங்கள் கிட்னியில் ஏற்படும் வீக்கம் மற்றும் நோய் தொற்றுக்களை குணப்படுத்த கூடியது. மஞ்சள் கிட்னியில் கற்கள் சேர விடாமல் காக்கும்.

#2 பூண்டு பூண்டு, கிட்னியை பலப்படுத்த உதவும் ஒரு அரிய வீட்டு மூலிகை. அல்லிசின்(allicin) எனப்படும் முக்கிய மூல பொருள் இதில் இருப்பதால் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டது. கிட்னியில் பூஞ்சை தொற்று ஏற்பட்டால் அதையும் குணப்படுத்தும் மருத்துவ குணம் உடையது. அத்துடன் கிட்னியில் சேரும் அழுக்குகளை முற்றிலுமாக சுத்தம் செய்யவும் பூண்டு உதவுகிறது.

#3 இஞ்சி ஆயிரம் மருத்துவ குணங்களை தனக்குளே வைத்திருக்கும் மருத்துவ பெட்டகம் இந்த இஞ்சி. பல ஆயிரம் வருடங்களாக இதனை மருத்துவ பயனுக்காக பயன்படுத்தி வருகின்றனர். கிட்னியில் சேரும் கற்களை சேரவிடாமல் காக்கும் தன்மை இந்த இஞ்சிக்கு உள்ளது. மேலும் கிட்னியில் ஏற்படும் நோய் தொற்றுக்களை அடியோடு நீக்கும். இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் பாக்டீரியாக்களை அழித்து கிட்னியில் ஆரோக்கியத்தை சீராக வைக்கும்.

#4 செலரி (celery) இயற்கையாகவே இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் கிட்னியில் சுரக்கும் டானிக்குகளை நன்றாக சுரக்க தூண்டுகிறது. இதனால் சிறுநீர் வெளியேறுவதில் எந்தவித பாதிப்புமின்றி இருக்கும். மேலும் நச்சு பொருட்கள் கிட்னியில் சேருவதை சுத்தம் செய்து இலகுவாக செயல்பட ஆரம்பிக்கும். இந்த செலரி அஜீரண பிரச்சனைக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.

#5 வோக்கோசு (Parsley) கிட்னியின் செயல்திறனை சுறுசுறுப்பாக வைக்க இந்த வோக்கோசு உதவுகிறது. தினமும் 1 டீஸ்பூன் வோக்கோசுவை நசுக்கி அதனை சுடு தண்ணீரில் கொதிக்கவிட்டு டீ போன்று சாப்பிட்டு வந்தால் கிட்னியை நன்கு சுத்தம் செய்துவிடும். அத்துடன் பாக்டீரியா,பூஞ்சை போன்ற எல்லா வகை கிருமிகளையும் அழிக்கும். சிறுநீர் நன்றாக வெளியேறவும், நல்ல ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தவும் இது பயன்படுகிறது.

#6 டான்டேலியன் வேர் (Dandelion Root) கிட்னியில் சேரும் அனைத்துவித அழுக்குகளையும் சுத்தம் செய்ய இந்த வேர் உதவுகிறது. சீறுநீர் உற்பத்தியை சீரான முறையில் வைக்கவும், கற்கள் சேரவிடாமலும் பாதுகாக்கும். அதிக மூலிகை குணங்களை கொண்டுள்ளதால் கல்லீரல் மற்றும் கிட்னி ஆகிய இரண்டின் செயல்பாட்டையும் சமநிலையில் வைத்து கொள்ளும். மேலும் இந்த வேரை சுடு நீரில் போட்டு குடித்து வந்தால், உடலில் ஏற்படும் நீர் கடுப்பு போன்றவற்றையும் விரைவில் குணப்படுத்தும்.

#7 சீமை சாமந்தி (chamomile) இது ஒரு அற்புதமான பூ. இதில் அதிகம் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கிட்னியில் சுரக்கும் கிரேட்டினினை வெளியேற்றி, அதன் அளவை சமமாக வைக்கும். கிட்னியில் கற்கள் உருவாவதையும் இந்த பூக்கள் தடுக்கும். இந்த பூவை கொண்டு டீ தயாரித்து தினமும் காலை வேளையில் குடித்து வந்தால் கிட்னி சார்ந்த எந்த நோய்யும் வராது.

#8 பூனைக்காஞ்சொறிச் செடி(nettle) கிட்னியை சுத்தம் செய்வதில் பெரும் பங்கு இந்த காஞ்சொறிச் செடிகளுக்கு உண்டு. சீரான ரத்த ஓட்டத்தை தந்து, கிட்னிக்கு அதிக வலுவை ஏற்படுத்த கூடியது. அதிக அளவில் சீறுநீர் வெளியேற பெரிதும் உதவிக்கிறது. மேலும் கிட்னியில் ஏற்படும் கற்களையும் இது கரைக்க வல்லது. கிட்னி சம்பந்தமான பிரச்சனைகளை இது எளிதில் குணப்படுத்துகிறது. மேலும், இதனை டீ போன்றும் அருந்தலாம்.

#9 பசில் (Basil) கிட்னியின் ஆரோக்கியத்தை காப்பதில் இந்த பசில் இலைகளுக்கு அதிக ஆற்றல் உள்ளது. இந்த இலையின் சாறுகளை குடித்து வந்தால் கிட்னியில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக குணப்படுத்த முடியும். அத்துடன் சீறுநீர் பாதையை சீராக வைக்க இந்த இலைகள் உதவுகிறது. கிட்னியில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.

மேற்சொன்ன இந்த மூலிகைகளை மருத்துவர்களின் ஆலோசனையோடு எடுத்து கொள்வது சிறந்தது.

5 1532328463

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button