ஆரோக்கிய உணவு

உங்கள் கவனத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த அன்றாட உணவில் தயிர்…!

த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் மற்றும் தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

பொடுகை நீக்க தயிர் சிறந்த தீர்வாக விளங்கும். தலைச்சருமத்தின் மீது கொஞ்சம் தயிரை தடவினால் போதும், பொடுகு தொல்லை நீங்கும். பூஞ்சை எதிர்ப்பியாக தயிர் செயல்படுவதால், பொடுகை நீக்க இது உதவிடும்.

புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும். தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈஸ்ட் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், இதனை உட்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.

தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால், அது பற்களுக்கும், எலும்புகளுக்கும் நல்லதாகும். எலும்புத்துளை நோய் போன்ற சில பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், சீரான முறையில் தயிரை உட்கொள்வது நல்லது.

மூல நோயால் அவதிப்படுபவர்கள் தயிரை பயன்படுத்தலாம். தயிர் சாதத்துடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பயனை அளிக்கும்.1532425345 0188

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button