மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இந்த செடி மட்டும் இருந்தா கொசு உங்க வீட்டு பக்கமே வராது…

கொசுக்கள் நமக்கு எரிச்சல் மூடுவது மட்டுமல்லாமல், பல நோய்களையும் வரவழைக்கிறது.

மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, யானைக்கால் நோய் மற்றும் இன்னும் பல பரவும் நோய்கள் மனித குலத்திற்கே திகிலூட்டுவதாக உள்ளது. இயற்கையாக சில தாவரங்கள் மூலமே கொசுக்களை விரட்டலாம்.

சாமந்தி கோடை காலங்களில் எங்கும் நிறைந்து காணப்படும் சாமந்தியை கொசுவை விரட்ட பயன்படுத்தலாம் என்பது நமக்கு புதியது. தோட்டக்காரர்கள் சிலவகை பூச்சிகளை அளிக்க பயன்படுத்தினாலும் சாமந்தி கொசுக்களை அழிப்பதிலும் வல்லது.

எலுமிச்சை புல் இது ஹார்ஸ்மின்ட் எனவும் அழைக்கப்படுகிறது. மிகவும் வலுவான வாசனை உடையது. சிட்ரோனெல்லா புல் என்று அழைக்கப்படும் இது கொசுவை விரட்டவும் உபயோகப்படுகிறது.

கடக மரம் கடக மரத்தை நட்டு வளர்த்தாலே கொசுக்கள் அந்த இடத்தை விட்டே ஓடி விடும். இதிலிருந்து பெறப்படும் வாசனை திரவியம் கொசுக்களை விரட்டப் பயன்படுகிறது.

துளசி கொசுவின் லார்வா பருவத்திலேயே அதை கொள்ள வல்லது துளசி. துளசியின் நறுமணம் கொசுக்களை நம் வீட்டுக்குள் அண்ட விடாமல் செய்துவிடும்.

லாவெண்டர் லாவெண்டரின் இனிய நறுமணம் நம்மை ரிலாக்ஸ் செய்து ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. லாவெண்டர் செடிகளை தோட்டம், ஜன்னல்கள் போன்றவற்றின் அருகில் வளர்க்கும் போது வெளி இட விருந்துகளில் கொசுக்களையும் பூச்சிகளையும் விரட்டி, விருந்தினர்களை கொசுக்கடியில் இருந்து பாதுகாக்கிறது.

புதினா பல வகை பூச்சிகளுக்கும் புதினாவின் வாசனை பிடிக்காது. இதை நம் வீட்டை சுற்றிலும் வளர்த்தால் கொசுவை நம் வீட்டுக்கு வரவழைக்காது. கொசு கடித்த இடத்தில் புதினா இலைச் சாற்றை தடவினால் நமைச்சல் இருக்காது.

ரோஸ்மேரி ரோஸ்மேரி ஒரு ரம்மியமான பூச்செடி. இது மட்டன் மற்றும் மீன் உணவுகளில் சுவையை கூட்ட பயன்படுகிறது. இது ஒரு இயற்கை கொசுவிரட்டி. நம் வீட்டு மூலிகைத் தோட்டத்தில் இதற்கும் இடம் தரலாம். பாச்சிகளை விரட்டி பட்டாம் பூச்சிகளை ஈர்க்க வல்லது.

பூண்டு பூண்டு பலவகை நோய்களை குணப்படுத்த வல்லது. பாக்டீரியாவை எதிர்க்க வல்லது. இதை நம் தோட்டத்தில் வளர்க்கும் போது இயற்கையாகவே கொசுக்கள் நம்மை அண்டாது. ஆரோக்கியத்திற்கும் உகந்தது.

5 1527236846

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button