அழகு குறிப்புகள்நகங்கள்

ஆரோக்கியமான நகங்களை பெற, நகங்களை மென்மையானதாக்க

நகத்தை கடிப்பதாலோ அல்லது நகத்தில் உள்ள அழுக்கை முரட்டுத்தனமாக எடுப்பதாலோ நக நுனிகளில் ஸ்ட்ரெஸ் முறிவு ஏற்படும்.

நாளடைவில் நகமே உடைந்து விழுந்து விடும். அதே போல் சிலருக்கு நகத்தை வைத்து எதையாவது சுரண்டும் பழக்கம் இருக்கும். சில பெண்கள் இதை பயத்தினால் செய்வதுண்டு. இது நகத்தின் மேல் கோடுகள் போல் தோற்றத்தை உருவாக்கி விடும்.

nail care

வீட்டில் உள்ள பொருட்களை துடைக்கும் போது, பெண்கள் கையில் ரப்பர் கையுறை அணிந்து கொள்வது நல்லது. அதனால் நகத்திற்கு ஆபத்தை விளைவித்து, அதனை உடைக்க செய்யும் ஆபத்தான ரசாயனத்தில் இருந்து அதனை பாதுகாக்கலாம்.

தரமற்ற நெயில் பாலிஷ்களை பயன்படுத்தினால், நகங்கள் வலுவிழந்து, ஆரோக்கியமிழந்து போய்விடும்.

நகம் புறத்தோல்களுக்கு கீழ் தான் வளரும். அதனால் புறத்தோலை மசாஜ் செய்தால், அந்த இடத்திற்கு இரத்தத்தை கொண்டு வந்து நகங்கள் ஆரோக்கியமாக வளர உதவி புரியும். இதற்கென சிகிச்சைக்கு செல்வதற்கு பதிலாக, வெறுமனே மசாஜ் செய்தால் போதிய பலனை அது அளிக்கும்.

நகங்களை மென்மையானதாக்க, நகப்படுக்கைகளை சுத்தம் செய்வது அவசியம். ஆனால் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.

நகங்கள் மற்றும் அதன் புறத்தோல் போன்றவற்றிற்கு மெனிக்யூர் முறையை சீரான முறையில் செய்து கொள்வது அவசியம். அதே போல் தினமும் சருமத்தின் மீது மாய்ஸ்சுரைசர் தடவினால், நகங்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button