சரும பராமரிப்பு

உங்க கழுத்து பகுதியில் உள்ள சதையை எப்படி குறைப்பது?

சிலர் முகத்தில் கீழ் தாடைக்கு அடியில் கொழுப்பு சேர்ந்து தொங்கியது போல் தோன்றும். இது தங்கள் அழகுக்கு இழுக்கு என பலரும் எண்ணுகிறார்கள்.

இது ஏன் வருகிறது?

மனித உடலில் பல்வேறு இடங்களில் இயற்கையாகவே கொழுப்பு தேங்கும். உதாரணத்திற்கு- கால்களில், மேல் கைகளில், இடுப்பு பகுதியில், பின்புறங்களில், தொடைகளில் என பல்வேறு பகுதிகளில் கொழுப்பு தேங்கும். இது ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் பிரச்னையை உண்டாக்கும்.

இவ்வாறு கழுத்தில் சதை தோன்றுவதற்கான காரணம் கூட அவர்களின் உடலில் கொழுப்பு தேங்கும் இடம் கழுத்து பகுதியாக இருப்பது தான்.

கழுத்தில் கொழுப்பு சேர்வது மட்டும் இல்லாது அனைத்து விதமான கொழுப்பு பிரட்னைகளுக்கும் தீர்வு என்ன தெரியுமா? கொழுப்பை கரைப்பதுதான்.!

அதற்கான டிப்ஸ் இதோ,

-கிரீன் டீ பருகுங்கள். அது உடலில் தேவையில்லாமல் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைக்கும்.

-காலை உணவு சாப்பிடும் முன்பு ஒரு ஸ்பூன் எக்ஸ்டிரா விர்ஜின் தேங்காய் எண்ணையை சாப்பிடுங்கள்.

-தேங்காய் எண்ணையை தண்ணீர் பாத்திரத்தில் ஒரு கப்பில் வைத்து கொதிக்கவிட்டு அதைக்கொண்டு கழுத்து சதைப்பகுதியில் மசாஜ் செய்யுங்கள்.

-காலையில் தினமும் சூடான நீரில் எலுமிச்சை பிழிந்து பருகுங்கள். சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்துக்கொள்ளுங்கள்.

-தினமும் பூசணி சாற்றை பருகுங்கள்.

-ஆளி விதைகளை தண்ணீரில் இட்டு கொதிக்கவிட்டு தேன் கலந்து குடியுங்கள்.

-பிறகு தினசரி 8 டம்பிளர் நீர் பருகுவது அத்தியாவசியமான ஒன்றாகும்.

இதெல்லாம் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் விஷயங்கள் ஆகும். பயன்படுத்தி பாருங்கள். உங்கள் கழுத்தும் அழகாக மாறும். what to do for double chin

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button