ஆரோக்கிய உணவு

எச்சரிக்கை தேங்காய் எண்ணெய் விஷத்தை விட மோசமானது! ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல்கள்!

நம் அன்றாட வாழ்வின் பயன்படுத்தும் பொருட்களில் தேங்காய் எண்ணெய்யும் முக்கியமான ஒன்றாகும். நம் முடிக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சாதாரணமான ஒன்றே. ஆனால் சிலர் சமையலுக்கும் பயன்படுத்துவதும் உண்டு.

தேங்காய் எண்ணெய் குறித்து அமெரிக்க இருதய கழகம் ஆராய்ச்சி நடத்தியுள்ளது. உடலிற்கு எந்த தீங்கும் விளைவிக்காது என இருந்த மக்களுக்கு ஆராய்ச்சியின் முடிவில் வெளியான தகவல் அதிர்ச்சியளித்தது.தேங்காய் எண்ணெய் விஷத்தை விட மோசமானது! எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

இதுகுறித்து தேங்காய் எண்ணெயயை உணவில் பயன்படுத்தும் மக்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறுது. இதற்கு எண்ணெயில் உள்ள கொழுப்பே காரணம் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் இதுகுறித்து ஹார்வர்ட் நோய்தொற்றியல் பேராசிரியர் கரின் மைச்செல்ஸ், தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமானது கிடையாது. இதை தூய விஷம் என்றே கூறலாம். இதிலுள்ள கொழுப்பு பன்றி கொழுப்பை விட அதிக பாதிப்பை தரக்கூடியது என்று கூறுகிறார்.

மேலும், நாம் சாப்பிடும் உணவுகளில் தேங்காய் எண்ணெய் மிக மோசமானது என மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார். பெரும்பாலன தொலைக்காட்சி விளம்பரங்கள் மல்டி பர்பஸ் எண்ணெய் என்றும் உணவிற்கு சிறந்த எண்ணெய் என்றும் விளம்பரபடுத்துகின்றனார். ஆனால் இதையெல்லம் நிரூபிக்க சிறய ஆதாரம் கூட இல்லை என்று கூறுகிறார் கரின்.

இதுகுறித்து ஊட்டச்சத்துப் பேராசிரியர் பிரான்க் சாக்ஸ் கூறுகையில், தேங்காய் எண்ணெயில் அதிக கொழுப்பு உள்ளது. இதனை உட்கொள்வதால் எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்ற கெட்ட கொழுப்பு உங்கள் அதிகரிக்கும். இது உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என கூறுகிறார்.

இதனால் முற்றிலுமாக தேங்காய் எண்ணெய்-ஐ தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் குறைந்த அளவு சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு பதில் ஆலிவ் ஆயில் எடுத்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர்.coconut oil is pure poison Harvard professojpg

Related Articles

One Comment

  1. பாரம்பரியத்துக்கு மாறுவது உங்களுக்கு பிடிக்காது மருத்துவ மாஃபியா கும்பலுக்கு நஷ்டம் வந்துவிடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button