ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா ஊதுபத்தியில் இவ்வளவு தீங்குகளா..?படிக்கத் தவறாதீர்கள்…

இந்தியர்களின் அனைத்து கோயில்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஊதுபத்தி. வீட்டிலும் பூஜையறையில் இந்த பொருள் இல்லாமல் இருக்காது நிச்சயம் இருக்கும். இது இல்லாமல் பூஜையறை நிறைவு பெறாது.

நறுமணம் மட்டும் தராமல் நல்ல சிந்தனைகளையும், தெளிவான புத்துணர்ச்சியையும் அளிக்கிறது என்று அனைவராலும் நம்பப்படுகிறது.

ஆனால் இதில் வரும் புகையால், நறுமணத்தால் பல தீங்குகள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியான தகவல்களை கூறுகிறார்கள்.

ஆம், ஊதுபத்தியின் புகையால் சிலர் சுவாசிக்க சிரமப்படுவர், மூச்சுவிட முடியாது, இருமல் வரும். இந்த புகை சில சமயம் சிகரட் புகைக்கு இணையானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம் நுரையீரலை பாதிப்படைய வைக்கும் என்பது போல ஊதுபத்தியின் புகையும் அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நுரையீரல் புற்றுநோய் வரக்கூட வாய்ப்புள்ளது. ஊதுபத்தியின் புகை நேரடியாக நுரையீரலுக்கு சென்றடைகிறது. அதித ஊதுபத்தி புகையை சுவாசித்தால் புற்றுநோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கர்ப்ப காலத்தில் அதிகம் ஊதுபத்தி உபயோகிக்காமல் இருப்பது நல்லது. முடிந்தவரை ஊதுபத்தி உபயோகிக்காமல் இருக்கலாம். அந்த புகையை குழந்தை வயிற்றில் இருக்கும்போது சுவாசிப்பதால் பிறக்கும் குழந்தைக்கு லுக்கேமியா ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

தொடர்ந்து அதிக ஊதுபத்தி புகையை சுவாசிப்பவருக்கு 12 சதவீதம் இதய நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 19 சதவீதம் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

வீட்டிற்குள் ஊதுபத்தி உபயோகிப்பதால் அந்த மணம், புகை குறைந்தது 2 மணி நேரத்திற்கு மேலாவது வீட்டிற்குள் இருக்கும். இதனால் வீட்டிற்குள் அதிகம் கார்பன் மோனாக்சைடை சுவாசிக்க செய்கிறது. இதனால் நரம்பு மண்டலத்தை மட்டும் பாதிக்காமல் ஞாபக சக்தியை குறைக்க செய்யும், கவனசிதறலையும் உண்டாக்கும் என்கிறார்கள்.

இனிமேலாவது ஊதுபத்தி பயன்பாட்டை குறைத்து உடலுக்கும் மனதுக்கும் கேடு விளைவிக்காமல் இருங்கள்.incense affect your health did you know

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button