கால்கள் பராமரிப்பு

உங்க கால் பாதங்களை கொஞ்சம் கவனியுங்கள்!

கால் பாதங்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டியது அவசியம்.

நாம் குளிக்கும்போது உடம்புக்கு சோப்பு போட்டு நன்றாக தேய்ப்பது போன்று, காலுக்கும் நன்றாக சோப்பு போட்டு அழுக்கினை அகற்ற வேண்டும்.

இல்லையேல், காலில் பித்தவெடிப்பு ஏற்பட்டு, தோல்கள் உரிந்துவிடும்.நாளடைவில் புண்கள் ஏற்படும்.

எனவே கால் பாதத்தை சுத்தமாக வைத்திருங்கள், இதோ உங்களுக்காக பாதத்தை பாதுகாக்க சில வழிமுறைகள்.

பாதத்தை பாதுகாக்க முதலில் எங்குச் சென்றாலும் காலணி அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வெறுங்காலில் நடப்பதை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.
வாரம் ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியில் அழுக்குகள் அண்டாமலும் பார்த்துக் கொள்ளவும்.
படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி பாதத்தின் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.
பாதங்களை அழுக்காகாமல் இருக்க வீட்டிற்குள்ளும் பஞ்சினால் ஆன காலணியை அணிந்துக் கொள்ளுங்கள்.
நல்ல காற்றோட்டம் உள்ள செருப்புக்களையும், காலணிகளையும் அணியுங்கள், இது உங்களின் கால்களில் புண்களை ஏற்படுத்தாமல் தவிர்க்க உதவுகிறது.37779138 641699809540738 5530859369672998912 n 2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button