தலைமுடி சிகிச்சை

இளநரையை குணப்படுத்தும் துளசி..! இதை முயன்று பாருங்கள்….

நம்ம வீட்டு தோட்டத்தில் இருக்கும் பல வகையான செடிகளும் அதிக படியான மருத்துவ குணங்கள் கொண்டவை. மருத்துவ குணம் உள்ள ஒவ்வொரு செடிகளுக்குள்ளும் பல வித அழகு ரகசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது. இன்றைய நவ நாகரிக உலகம், அவை ஒவ்வொன்றையும் தட்டி எழுப்பு கின்றன. ஒவ்வொரு இலைகள், விதைகள், செடிகள், காய்கள், பழங்கள் இப்படி அனைத்து வகைகளிலும் அவை எவ்வாறு அழகுக்கு பயன்படுகின்றன என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் துளிசியின் அழகு குறிப்பை ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் குறிப்புகள் வெளிவந்தன. இந்த துளசி மருத்துவத்திற்கு எவ்வளவு பயன்படுகிறதோ அதே அளவில் அழகு பராமரிப்பிற்கு உதவுகிறது. இந்த பதிவில் துளசி எவ்வாறு முக மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆரஞ்ச் தோலும் துளசியும்… ஆரஞ்ச் தோல் முக அழகிற்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, முக பொலிவை தந்து முகப்பருக்களை நீக்கும். மேலும் துளசியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தில் உள்ள எண்ணெய் பசைகளை குறைக்க வல்லது.

தேவையானவை :- துளசி ஆரஞ்ச் தோல் சந்தன தூள்

செய்முறை :- துளசியுடன் காய்ந்த ஆரஞ்ச் தோலை நன்கு அரைத்து கொண்டு, முகத்தில் முகப்பருக்கள் உள்ள இடத்தில தடவவும். இவ்வாறு செய்தால் முக பருக்கள் விரைவில் குணமாகும். அல்லது சந்தன தூள் மற்றும் துளசி ஆகியவற்றை அரைத்து முகத்தில் தடவினால் முகப்பருக்கள் குணமாகும்.

கலை இழந்த முகத்திற்கு… துளசியை மருத்துவத்திற்கு எவ்வாறு உபயோகிக்கிறமோ அதே போல முக அழகிற்கும் பயன்படுத்தலாம். முகம் மிகவும் கலை இழந்து தெரிபவர்களுக்கு இந்த அழகு குறிப்பு பெரிதும் உதவும்.

தேவையானவை :- துளசி முல்தானி மட்டி ரோஸ் நீர்

செய்முறை :- முதலில் 10 துளசி இலைகளை எடுத்து கொண்டு, அவற்றை அரைத்து அதனுடன் 2 டீஸ்பூன் முல்தானி மட்டி சேர்த்து கலக்கவும். பின் ரோஸ் நீரை இதில் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால், முகம் கலையுடன் இருக்கும்.

இளநரையை குணமாக்க… இன்று பல ஆண்களுக்கு உள்ள முடி சார்ந்த பிரச்சினைகளில் முதன்மையானது இந்த இளநரைதான். இளநரை உள்ளவர்கள் இந்த அழகு குறிப்பை பயன்படுத்தினால் இளநரையில் இருந்து விடுபடலாம்.

தேவையானவை :- நெல்லிக்காய் பவ்டர் துளசி ஆலிவ் எண்ணெய்

செய்முறை :- முதலில் 15 துளசி இலையை நன்கு அரைத்து கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவ்டரை கலந்து கொள்ளவும். இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன் கலந்து தலைக்கு தடவுங்கள். 2 மணி நேரத்திற்கு பிறகு தலையை வெண்ணீரில் அலசினால், இளநரைகளை குணப்படுத்தலாம். மேலும் இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்யலாம்.

முகத்தை சுத்தம் செய்ய… உங்கள் முகம் மிகவும் அசுத்தமாக உள்ளதா..? இனி அதை பற்றிய கவலையே வேண்டாம். முகத்தில் உள்ள அழுக்குகளை இந்த முட்டை மற்றும் துளசி ஆகிய இரண்டும் சேர்ந்து நீக்கி விடும். மேலும் முக துவாரங்களையும் விரிவடைய செய்து விடும்.

தேவையானவை :- முட்டை துளசி

செய்முறை :- நன்கு 10 துளசி இலையை அரைத்து கொண்டு, அவற்றுடன் முட்டை வெள்ளை கருவை சேர்க்க வேண்டும். பிறகு இவை இரண்டையும் நன்றாக அடித்து கொண்டு, முகத்தில் தடவவும். இந்த அழகு குறிப்பு முகத்தில் உள்ள கிருமிகளை நீக்கி, பொலிவு பெற செய்யும். மேலும் தோலை இறுக செய்யும்.

பொடுகு தொல்லையில் விடுபட… அதிக படியான தூசுகள், அழுக்குகள் தலையில் சேர்வதால் அது பொடுகாக மாறி விடுகிறது. இதனை சரி செய்ய துளசி எண்ணெய், பாதம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து கொண்டு தலையின் அடி வேரில் தடவி தலைக்கு குளித்தால், பொடுகு பிரச்சினை குணமாகும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.cvrpic 1535196027

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button