25.8 C
Chennai
Sunday, Jan 12, 2025
257
முகப் பராமரிப்பு

உங்க முகத்தை என்றும் இளமையாக வைத்து பட்டுப்போல மாற்றும் ஆளி விதை…! சூப்பர் டிப்ஸ்

பொதுவாகவே அழகு என்பது பெண்களின் கண்ணோட்டமாக மாறிவிட்டது. ஆனால் இப்போதெல்லாம் இது ஆண்களுக்கும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. அழகு என்றதும் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அர்த்தம் இல்லை. அவர்களின் உடல் ஆரோக்கியத்தால் முக அழகும் பொலிவு பெற வேண்டும். இதுதான் நிஜ அழகாகும். வெறும் வேதி பொருட்களை கொண்டு நாம் முகத்தை அழகு செய்து கொள்வது முற்றிலும் வெற்று தனமானது.

முகம் உண்மையிலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு இயற்கை வகையிலான பொருட்களே முதன்மையாக கருத படுக்கிறது. ஆனால் இன்று நாம் பல வேதி பொருட்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றோம். இது முக ஆரோக்கியத்தை கெடுப்பதோடு உடலிலும் சிறிது மாற்றங்கள் ஏற்படுத்தி விடுகின்றது. இந்த பதிவில் ஒரு சின்ன விதை எவ்வாறு உங்கள் முக அழகிற்கு உதவும் என்பதை பற்றி தெரிந்து, பயன்படுத்துவோம்

ஆளி விதை அழகிற்கும்..! நம் முக அழகை மேம்படுத்த எண்ணற்ற வழிகள் இருந்தாலும், இயற்கை பொருட்களை கொண்டு செய்யும் முறைதான் எப்போதும் வெற்றி பெரும். அந்த வகையில் இந்த ஆளி விதை ஒரு அற்புத விதையாகும். ஆளி விதைகள் உடல் ஆரோக்கியத்துக்கும், முக ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள மூல பொருட்கள், முகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைக்கு தீர்வாக உள்ளது.

சுருக்கங்களை போக்க… முகத்தில் உள்ள சுருக்கங்கள் போக்குவதற்கு என்னென்னமோ வழிகளை எல்லாம் செய்து அலுத்து விட்டீர்களா..? இனி அந்த கவலை வேண்டாம். முக சுருக்கங்களை சரி செய்ய இந்த ஆளி விதைகள் இருக்கின்றது. பலருக்கு சிறு வயதிலே முகம் வயதான தோற்றம் தர கூடும். அவர்களுக்கும் இந்த ஆளி விதையில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் (phytochemicals) நன்கு உதவும். அத்துடன் வயதான தோற்றத்தையும் நீக்கும்.

பட்டுபோன்ற முகத்திற்கு… பலருக்கு மிகவும் மென்மையான முகம் வேண்டும் என்பது மிகுந்த ஆசை. ஆனால், இது வேதி பொருட்களால் நிறைவேறாது. இதற்கென்றே இந்த ஆளி விதை அழகு குறிப்பு உள்ளது.

தேவையானவை :- 1 டேபிள்ஸ்பூன் ஆளி விதை 1 டீஸ்பூன் முல்தானி மட்டி 1/2 டீஸ்பூன் ரோஸ் நீர்

செய்முறை… முதலில் ஆளி விதைகளை எடுத்து கொண்டு, அவற்றை நன்கு அரைத்து கொள்ளவும். பின் அதனுடன் முல்தானி மட்டி, ரோஸ் நீர் கலந்து முகத்தில் பூசினால், முகம் பட்டுபோல மின்னும். மேலும் சரும பிரச்சினைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும். இந்த அழகு குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்யலாம்.

முக பருக்களுக்கு… அதிக படியான ஆண்கள் மற்றும் பெண்களின் முக அழகை பெரிதும் கெடுக்கும் ஒன்று இந்த முக பருதான். முகத்தில் உள்ள முக பருக்கள், நீங்க வேண்டும் என்றால் இந்த முறையை செய்யுங்கள்.

தேவையானவை :- 1 டேபிள்ஸ்பூன் ஆளி விதை 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன் தேன்

செய்முறை… நீரில் முதல் நாள் இரவிலே ஆளி விதைகளை ஊற வைக்க வேண்டும். பின், அடுத்த நாள் அதனை நன்கு அரைத்து கொள்ளவும். இதனுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இது முகத்தில் உள்ள முகப்பருக்களை குணமாக்கும். மேலும், இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வாருங்கள்.

என்றும் இளமையாக இருக்க… பலருக்கும் “இளமை” மீது அதீத காதல் இருக்கும். அதிலும் என்றும் இளமை என்றால் மிகவும் அற்புதமான ஒரு விஷயமே. இதனை அடைய இந்த அழகு குறிப்பு உங்களுக்கு உதவும்.

தேவையானவை :- 1 டீஸ்பூன் கிராம்பு தூள் 1 டேபிள்ஸ்பூன் ஆளி விதை 1 டேபிள்ஸ்பூன் யோகர்ட்

செய்முறை... நன்கு அரைத்த ஆளி விதையுடன் கிராம்பு, யோகர்ட் சேர்த்து கலக்கி, முகத்தில் பூச வேண்டும். பின், 15 நிமிடம் மசாஜ் செய்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவு பெற்று இளமையான தோலை தரும். அத்துடன் முகத்தில் உள்ள செல்களை மிகவும் புத்துணர்வுடன் வைக்கும்.

முக மினுமினுக்க… முகம் எப்போதும் மங்கலாக உள்ளதா..? இனி இதனை சரி செய்ய இந்த ஆளி விதை அழகு குறிப்பை பயன்படுத்துங்கள். இது முகத்தின் வெண்மையை விரைவிலே அதிகரிக்கும். தேவையானவை :- 1 டேபிள்ஸ்பூன் ஆளி விதை

செய்முறை… நன்கு அடித்த முட்டையுடன் ஆளி விதைகளை சேர்க்க வேண்டும். பிறகு இதனை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவற்றின் இரண்டு கலவையும் முக அழகை மெருகேற்றும். அத்துடன் கருமையான முகம் கொண்டவர்களின் முகத்தை முழுமையாக அழகு பெற செய்து மினுமினுக்க செய்யும்.

257

Related posts

பெண்களே 30, 40 வயசானாலும் இளமையாக அழகாக காட்சியளிக்கணுமா?

nathan

சூப்பர் டிப்ஸ் மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்

nathan

உங்க முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா..? அப்ப இத படிங்க!

nathan

பேஷியல் என்பது என்ன?

nathan

பருக்களால் உண்டான தழும்புகள், புள்ளிகள் ஆகியவற்றை மறைக்க உருளைக் கிழங்கு பேஸ் பேக்!….

nathan

உங்களுக்கு நெற்றியில் இப்படி பருக்கள் வருதா? அப்ப இத படிங்க!

nathan

முகத்துக்கு அழகூட்டும் சில ஃபேஸ் பேக்|

nathan

சூப்பர் டிப்ஸ்! சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு தரும் வாழைப்பழம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருவளையங்களைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!!!

nathan