மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா முதுகுவலியை நிரந்தரமாக விரட்டும் பூண்டுப்பால்… செய்வது எப்படி?

முதுகுவலி ஒரு காலத்தில் வயது முதிர்ச்சியின் காரணமாகவே வந்தது. ஆனால் இப்போதெல்லாம் மிக இளம் வயதிலேயே முதுகுவலி வந்துவிடுகிறது.

இதற்கு நம்முடைய வாழ்க்கை முறையில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

முதுகுவலிக்கு காரணம் நம்மில் பலருக்கும் மிகக் கடுமையாக இடுப்பு வலி அல்லது முதுகு வலி வந்து போகும். அதிலும் குறிப்பாகு, இன்றைக்கு இளைஞர்கள் நிறைய நேரம் இரு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்வது, கம்யூட்டர் முன்பாக அதிக நேரம் செலவிடுவது ஆகியவை தான் முதுகுவலி உண்டாக மிக முக்கியக் காரணம்.

விளைவுகள் இந்த கடுமையான முதுகுவலியின் காரணமாக, கனமான பொருள்களை நம்மால் தூக்கிச் செல்ல முடியாது. ஓரிடத்தில் அதிக நேரம் நிறகவோ உட்காரவோ முடியாமல் போகும். இதுவே 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், முதுகு, கை, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் மிகக் கடுமையான வலி உண்டாகும். இடுப்பு மூட்டுக்களில் உள்ள நரம்புகளில் கூட பிரச்னைகள் உண்டாகும்.

தீர்வு இந்த மூட்டுவலிக்கு என்னதான் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டாலும் அது தற்காலிகமான தீர்வாக மட்டுமே அமையும். இந்த பிரச்னையை நிரந்தரமாகப் போக்க வேண்டுமென்றால், அதற்கு ஆயுர்வேதமும் வீட்டு வைத்தியமும் தான் நிரந்தரத் தீர்வினைத் தர முடியும். இந்த கடுமையான மூட்டுவலிக்கு நிரந்தரத் தீர்வாக பூண்டுப்பால் இருந்திருக்கிறது. அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் பூண்டுப்பால் செய்வதற்கு நிறைய பொருள்கள் எதுவும் தேவையில்லை. மிக முக்கியமாகத் தேவைப்படவது இரண்டே இரண்டு பொருள்கள் தான். இது பூண்டும் பாலும் தான்.

பால் – 300 மில்லி பூண்டு – 8 முதல் 10 பற்கள் வரை (அளவைப் பொறுத்தது)

தயாரிக்கும் முறை முதலில் பாத்திரத்தை நன்கு கழுவி விட்டு, அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து பாலை சூடேற்றுங்கள். பால் பொங்கி, லேசாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பூண்டு பற்களை தோல் உரித்துவிட்டு தட்டி, கொதிக்கும் பாலில் போடுங்கள். மீண்டும் மிதமான தீயிலேயே வைத்து பூண்டு நன்கு வேகும்வரையில், வைக வைத்துப் பின் இறக்க வேண்டும்.

குடிக்கும் முறை இப்படி காய்ச்சிய பூண்டப்பாலை தினமும் குடித்து வர வேண்டும். இதை இரவிலோ அல்லது காலையிலோ தினமும் குடித்து வந்தால், இடுப்பு அல்லது முகுதுவலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே செல்வதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். வலி முழுமையாகப் போய்விட்டது என்பதை உணரும்போது இதை நிறுத்தி விடலாம். தொடர்ந்து குடித்து வந்தாலும் எந்த பிரச்னையும் உண்டாகாது.

வேறு யார் குடிக்கலாம்? இந்த பூண்டுப்பால் என்பது இடுப்பு மூட்டுக்களில் உள்ள வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்தும். மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிக அதிக அளவில் உள்ளன. அதனால் அழற்சி பிரச்னை உள்ளவர்கள் அல்லது யார் வேண்டுமானாலும்இதை குடிக்கலாம். இந்த சுவையை கொஞ்சம் அதிகரிக்க கொஞ்சம் தேன் கலந்தும் பருகலாம்.

2 1535191991

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button