சரும பராமரிப்பு

பார்லர் போய் ப்ளீச் செய்யாமல் இந்த முறையை பயன்படுத்தலாம்

1 .ஆலிவ் எண்ணெய் எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் , தோளில் உள்ள சுருக்கங்கள்,மரு போன்றவை நீங்கி விடும்.

2 .உலர்ந்த சருமத்திற்கு முட்டையின் வெள்ளை கருவை தனியே பிரித்து எடுத்து அத்துடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து முகத்தில் தடவவேண்டும் .அரைமணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ ,முகம் பொலிவுடன் மிளிரும்.Beauty smiling model with natural make up and long eyelashes. Youth and skin care concept. Spa and wellness. Make up long hair and lashes. Close up selective focus.

3 .காரட் எடுத்து நன்கு கூலாக அரைத்து அத்துடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி விடவும்.நன்கு காய்ந்தவுடன் முகத்தை கழுவவும்.முகம் பளிச் என்று இருக்கும்.(திருமணங்களுக்கு செல்லும்போது பார்லர் போய் ப்ளீச் செய்யாமல் இந்த முறையை பயன்படுத்தலாம்.)

4 .பச்சைபயறு,கஸ்தூரி மஞ்சள் ,பூலாங்கிழங்கு மூன்றையும் ஒன்றாக கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.அதில் சிறிது எடுத்து தயிர் கலந்து முகத்தில் பூசவும்.சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.இதே கலவையில் சிறிது எடுத்துதேங்காய் எண்ணெய்,ரோஸ் வாட்டர் ,எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து சோப்புக்கு பதிலாக உடலில் பூசி குளித்தால் சருமம் அழகாக தோன்றும்.

5 .தினமும் காலையில் இளநீர் பருகினால் முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.

6 .கண் பார்வை நன்கு வலுப்பெற அதிகாலையில் உதிக்கும் சூரியனை தினமும் பார்த்தல் வேண்டும்.

7 .மருதாணி,செம்பருத்தி,கருவேப்பிலை,வேப்பிலை,ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டுபின்பு தலைக்கு தேய்க்கவும்.இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும்.மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது.ஷாம்புக்கள் பயன்படுத்தும்போதும் இதே போல் செய்யவேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.

8.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும்.கூந்தல் அடர்த்தியாக வளரும்.

9 .கருவேப்பிலை,சின்ன வெங்காயம் -4 ,இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்துகுளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும். என்ன நண்பர்களே ! மேலே கூறியவற்றை பார்த்து பயந்து விடவேண்டாம்.தைரியமாக செய்து பார்க்கலாம்.நான் உத்தரவாதம் தருகிறேன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button