மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கருப்பு ஏலக்காய் கசாயம்…

கருப்பு ஏலக்காய் மசாலா பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இதன் அரோமேட்டிக் நறுமணத்தால் பிரியாணி முதல் இந்திய உணவு வகைகளில் பெரிதும் பயன்படுத்துகின்றனர். இந்த கருப்பு ஏலக்காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் நிறைய நிறைய மருத்துவ துறைகளிலும் அதே நேரத்தில் அழகு பராமரிப்புக்கும் பெரிதும் பயன்படுகிறது.

பயன்கள் இது இதய நோய்கள், குடல் சார்ந்த பிரச்சனைகள், சுவாச மண்டல பிரச்சினைகள், ஆஸ்துமா போன்றவற்றிற்கு உதவுகிறது. அதுமட்டும் அல்லாது இன்னும் நிறைய ஆரோக்கியக் கோளாறுகளை இந்த கருப்பு ஏலக்காய் சரி செய்கிறது.

சுவிங்கம் இதை வெறுமனே வாயில் போட்டு சுவிங்கம் போல் மென்று வந்தாலே போதும் சுவாசப் பாதையில் ஏற்பட்டுள்ள கோளாறுகள், இருமல், நுரையீரல் காசநோய், ஆஸ்துமா போன்றவற்றை குணப்படுத்துகிறது. சரி இதனுடைய முக்கியமான பயன்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்

இதய நோய்கள் இந்த கருப்பு ஏலக்காய் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதய துடிப்பை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இரத்தம் கட்டிப் போவதை யும் தடுக்கிறது.

வாய் பிரச்சினைகள் உங்களுக்கு வாயில் ஏற்படும் பற்சொத்தை, வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தம் வடிதல் போன்றவற்றை சரியாக்க வெறும் 2 கருப்பு ஏலக்காயை வாயில் போட்டு மென்று தின்றாலே போதும். இதன் எண்ணெய் யும் வாய் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சீரண சக்தி கருப்பு ஏலக்காய் நமது உடலில் இரைப்பை மற்றும் குடல் சுரப்பிகளை தூண்டி சீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் அல்சர், அமிலத்தன்மை (அசிட்டிட்டி) போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

இரத்த ஓட்டம் இதிலுள்ள விட்டமின் சி என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் முழுவதும் இரத்தம் சீராக ஓட உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி இந்த கருப்பு ஏலக்காயில் உள்ள ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் குணங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நோய் தொற்றுகள் நம்மை அண்டாமல் காக்கிறது.

ஆஸ்துமா ஃபோர்டிஸ் மருத்துவமனை, முலாந்தைச் சார்ந்த டாக்டர் பீரியாஸ் வைத்யா என்ற நுரையீரல் நோய் சிகச்சை மருத்துவர் கூறுவதாவது ” கருப்பு ஏலக்காயை விலங்குகளிடம் ஆராய்ச்சி செய்த போது அது மூச்சுக் குழல் பகுதியில் சில விளைவுகளை ஏற்படுத்தியது. இது சுவாசப் பாதையில் கால்சியம் சேனல் மாதிரி செயல்படத் தொடங்கியது. இதிலுள்ள ப்ளோனாய்டுகள் சுவாச செயலை ரிலாக்ஸ் ஆக்கி ஆஸ்துமாவிற்கு உதவுகிறது என்கிறார். ஆனால் இருப்பினும் ஆஸ்துமாவை முற்றிலுமாக குணப்படுத்த இது உதவாது. ஆனால் உங்கள் மோசமான சுவாசப் பாதையை குறைந்தளவு சரியாக்கி மூச்சு விட இது உதவுகிறது.

டாக்டர் ஜெய் காம்கர், டயட்டிஷனிஸ்ட், ஃபோர்டிஸ் மருத்துவ மனையில் இருந்து கூறுவதாவது “கருப்பு ஏலக்காயில் ஆன்டி செப்டிக், ஆன்டிபாஸ்மோடிக், அழற்சி எதிர்ப்பு பொருள்கள் உள்ளன. இதனால் இது ஒரு ஆக்ஸிஜனேற்ற காரணியாக , ஒரு ஹோமியோஸ்டிஸ் ஏஜென்ட் மாதிரி செயல்பட்டு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் சுவாச பாதையில் நுரையீரல் வழியாக காற்று உள்ளே செல்லவும் வெளியே விடவும் எளிதாகிறது. இருமல், தொண்டை புண், சளி போன்றவற்றை குணப்படுத்துகிறது. சுவாசப் பாதையில் உள்ள சளியை இளக்கி வெளியேற்ற உதவுகிறது.

ஏலக்காய் கசாயம் இந்த கருப்பு ஏலக்காயை கொண்டு எப்படி கசாயம் தயாரிக்கலாம் என்பதை நம்முடைய முன்னோர்கள் விளக்கியுள்ளனர்.

தேவையான பொருட்கள் 2 கிராம்பு 4-5 கருப்பு ஏலக்காய் 1 டீ ஸ்பூன் இஞ்சி (துருவியது) 5-6 துளிசி இலைகள் 3-4 கப் தண்ணீர்

தயாரிக்கும் முறை மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களை ஒரு கடாயில் போட்டு வதக்குங்கள், இப்போது கடாயில் தண்ணீர் ஊற்றி இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும். பிறகு துளிசி இலைகளை போட்டு 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கப்பில் தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ளவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும்.

இது ஆஸ்துமாவின் தீவரத்தை குறைக்க பயன்படுகிறது. முற்றிலும் குணப்படுத்தாவிட்டாலும் ஆஸ்துமாவின் பாதிப்பை பெருமளவு குறைக்க உதவுகிறது.804

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button