மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கொத்தமல்லி மூலிகை எப்படி ஆண்மையை அதிகரிக்கும் ?

உங்களுக்கு தெரியுமா கொத்தமல்லி மூலிகை எப்படி ஆண்மையை அதிகரிக்கும் ?இயற்கை நமக்கு அளித்துள்ள அனைத்து காய்கறிகளுமே ஒரு மூலிகைதான். ஆனால் அவற்றில் சிலவற்றை மட்டுமே நாம் பயனுள்ளதாக உபயோகித்து கொண்டிருக்கிறோம். ஆனால் பல மூலிகைகள் அதன் மருத்துவ

குணங்கள் தெரியாததால் சரியாக உபயோக படுத்தப்படாமலும், தவறாகவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் கொத்தமல்லி.

கொத்தமல்லியை நாம் அதிகமாக பயன்படுத்துவது உணவை அலங்கரிக்க மட்டும்தான். இல்லையெனில் வாசனைக்காக பயன்படுத்துவோம். ஆனால் கொத்தமல்லி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. குறிப்பாக ஆண்மைகுறைவிற்கும், சர்க்கரை நோய்க்கும் மிகச்சிறந்த மருந்தாக செயல்படக்கூடியது. இந்த பதிவில் கொத்தமல்லியின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

வீக்கத்தை குறைத்தல்

அத்தியாவசிய எண்ணெய்களின் 11 மூலக்கூறுகளில் ஒன்றான சியானால் மற்றும் லினோயிக் அமிலம் என இரண்டுமே கொத்தமல்லியில் உள்ளது. இவை இரண்டும் சருமத்தில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க பயன்படுகிறது. மேலும் கொத்தமல்லி உடலில் உள்ள தேவையில்லாத நீரை வெளியேற்றவும் உதவி செய்கிறது.

சருமபொலிவு

கொத்தமல்லியில் உள்ள கிருமி நாசினிகள், பூஞ்சை எதிர்ப்பு பண்பு, வறட்சியை குறைப்பது போன்ற பல குணங்கள் உள்ளதால் இது சருமத்தில் பொலிவை ஏற்படுத்த கூடியது. அதுமட்டுமின்றி சருமத்தில் ஏற்படக்கூடிய வெடிப்புகளையும் சரிசெய்கிறது.

கொழுப்பு அளவை குறைக்கிறது

கொத்தமல்லியில் உள்ள லினோயிக் அமிலம், ஒழிக்க அமிலம், ஸ்டீரியிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைக்கிறது. மேலும் தமனிகள் மற்றும் நரம்புகளின் உள் சுவர்களில் சேர்ந்திருக்கும் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன, இது மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது. அதுமட்டுமின்றி இது உடலிற்கு தேவையான நல்ல கொழுப்புகளையும் வழங்குகிறது.

வயிற்றுப்போக்கு

கொத்தமல்லியில் உள்ள போர்னியால் மற்றும் லினாலோல் ஆகியவை வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தகூடியது, மேலும் கல்லீரலின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தகூடியது. கொத்தமல்லி வாந்தி, குமட்டல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்தும். இதன் முழுமையான பயன்கள் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது. சாப்பிட செல்வதற்கு முன் சில கொத்தமல்லி தழைகளை வாயில் போட்டு மெல்லுவது உங்கள் பசியை அதிகரிக்க செய்யும்.

இரத்த அழுத்தத்தை சீராக்குதல்

அதிக மனஅழுத்தம் உள்ளவர்கள் கொத்தமல்லியை உட்கொள்வது அவர்களின் இரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடும். இது கால்சியம் அயனிகள் மற்றும் அசிடைல்கொலைன் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை அதிகரிக்கிறது, இது உங்கள் நரம்பியல் மண்டலத்தை வலுவாக்கும்.

வாய்ப்புண்

கொத்தமல்லியில் உள்ள சிட்ரோனெல்லோல் அடிப்படையில் ஒரு ஆன்டிசெப்டிக் ஆகும். இதில் உள்ள மற்ற மூலக்கூறுகள் வாய்ப்புண் மற்றும் அல்சரை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இவை புண்களை வேகமாக குணப்படுத்துவதுடன் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தையும் தடுக்கிறது. கொத்தமல்லி பெரும்பாலான பற்பசைகளில் உபயோகப்படுத்தபடுகிறது என்பது பலரும் அறியாத ஒன்றாகும்.

எலும்புகளின் ஆரோக்கியம்

கால்சியம் அதிகம் இருப்பதால் யாரெல்லாம் தங்கள் எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ அவர்களுக்கு கொத்தமல்லி ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. கால்சியம் மற்றும் இதில் உள்ள மற்ற மூலக்கூறுகள் எலும்புகளை பலப்படுத்துவதுடன் அஸ்டோபோரோசிஸ் ஏற்படுவதையும் தடுக்கிறது. உங்கள் உணவுகளில் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து கொள்வது கூட உங்கள் எலும்புக்கு நன்மையை வழங்கக்கூடியது.

கண் ஆரோக்கியம்

கொத்தமல்லி ஆன்டிஆக்சிடண்ட்ஸ், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களைக் பல கொண்டிருக்கிறது, இவை அனைத்தும் பார்வை கோளாறுகளைத் தடுக்க உதவக்கூடியவை. இவை கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் கண்களில் ஏற்படும் வலியையும் குறைக்கிறது. இதன் இலைகளில் உள்ள பீட்டா கரோட்டின் பல கண் நோய்களை தடுப்பதுடன் இழந்த கண் ஆரோக்கியத்தையும் மீட்டு தரும்.

சர்க்கரை நோய்

கொத்தமல்லி இரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவை அதிகரிக்கிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குகிறது. இது சர்க்கரை நோய் மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. இது சர்க்கரை அளவை குறைப்பதோடு உடலின் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.

ஆண்மைக்குறைவு

ஆண்களுக்கு கொத்தமல்லி ஒரு மிகச்சிறந்த நண்பனாக செயல்படுகிறது. இதிலுள்ள அத்தியாவசிய எண்ணெய்களின் மூலக்கூறுகள் ஆண்மைக்குறைவை குணப்படுத்தக்கூடியது. இதனை பச்சையாகவும் சாப்பிடலாம் அல்லது இதில் தேநீர் தயாரித்தும் குடிக்கலாம். இதனை தொடர்ந்து செய்துவருவது நரம்புகளை புத்துணர்ச்சி அடைய செய்வதோடு, விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.1453119115 6567

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button