29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 1536906996
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா நண்டு யாரெல்லாம் சாப்பிடலாம்? இவ்வளவு நன்மைகளா?

கடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் ஒரு வகை உணவு நண்டு. இது மிகவும் சுவை மிகுந்த உணவாக இருப்பதுடன், நண்டில், அத்தியாவசிய கொழுப்பு, ஊட்டச்சத்து மற்றும் கனிமங்கள் அதிக அளவில் உள்ளது. நண்டில் அதிக அளவு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், குறிப்பாக கண் பார்வை, இதயம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் இதன் பங்கு பெருமளவில் உள்ளது. ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நண்டை உணவில் இணைத்துக் கொள்ளும்படி ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நண்டின் உடல் பகுதியில் 45% வரை ஒருவர் சாப்பிடலாம். இதனால் உடல் வலிமை அதிகரிக்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. நாட்பட்ட இதய நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் நண்டு எடுத்துக் கொள்வதால் அதன் பாதிப்பு குறைகிறது மற்றும் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கிறது.

ஊட்டச்சத்துக்கள் 100கிராம் நண்டு இறைச்சியில் 59மிகி கால்சியம், 1.5கிராம் கொழுப்பு , 19 கிராம் புரதம், 29IU வைட்டமின் ஏ, 7.6 மிகி வைட்டமின் சி, 9.78 மைகி வைட்டமின் பி 12 ஆகியவை உள்ளன. தாமிரம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ், செலெனியம், வைட்டமின் பி 12 மற்றும் ஜின்க் ஆகிய ஊட்டச்சத்துகள் நண்டு இறைச்சியில் உள்ள மற்ற ஊட்டச்சத்துகளாகும்.

எடை குறைப்பு நண்டு இறைச்சியில் கலோரிகள் மிக மிகக் குறைவு. 100 கிராம் நண்டு இறைச்சியில் 1.5 கிராம் அளவு மட்டுமே கொழுப்பு உள்ளது. மீதமுள்ள கலோரி அளவு புரதத்தில் இருந்து கிடைக்கிறது. ஆகவே உடல் பருமன் உள்ளவர்களின் கடல் உணவு தேர்வில் நண்டு சிறந்த தேர்வாக உள்ளது. எடை குறைப்பு மேற்கொள்ளும் எண்ணம் உள்ளவர்கள் நண்டு இறைச்சியை எடுத்துக் கொள்வதால் சிறந்த பலன் அடையலாம்.

கண்பார்வை நண்டு இறைச்சி வைட்டமின் ஏ சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. இதனால் உங்கள் கண்பார்வை அதிகரிக்கிறது. கரிமக் கூறுகளான ரெடினொல் , ரெடினால், ரெடினியோக் அமிலம் , பீடா கரோடின் ஆகியவை கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய இடம் பிடிக்கின்றன. கண் புரை மற்றும் கருவிழி சிதைவு போன்றவற்றை தடுப்பதில் சிறந்த பலன் தருகிறது.

அணுக்கள் சேதமடைதல் நண்டு இறைச்சியில் செலெனியம் அதிக அளவில் காணப்படுகிறது. ப்ரீ ரேடிகல் என்னும் தீங்கு விளைவிக்கும் கூறுகளிடமிருந்து அணுக்கள் மற்றும் திசுக்களை சேதமடையாமல் பாதுகாக்க செலெனியம் உதவுகிறது. செலெனியம், தைராய்டு சுரப்பிகளின் ஆக்சிஜனேற்ற சேதங்களை தடுப்பதன் மூலம், அவற்றின் சீரான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இதன்மூலம் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. அணுக்கள் சேதமடையாமல் பார்த்துக் கொள்வதோடு செக்ஸ் ஆர்கன்களைத் தூண்டி, உடலை வெப்பமேற்றி, செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டிவிடும் தன்மையும் இதற்கு உண்டு. உடல் உஷ்ணத்தைத் தூண்டும் என்பதால் தான் இயல்பாகவே குளிர்குாலத்தில் அதிகம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

இதயப் பாதுகாப்பு உடலின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், செலெனியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் ஆதாரமாக நண்டு இறைச்சி விளங்குகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகரிப்பதால் மாரடைப்பு மற்றும் வாதம் உண்டாகும் அபாயம் ஏற்படுகிறது. இதய நோயாளிகள் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் அளவில் கவனமாக இருந்து இவை குறைவாக இருக்கும் உணவை எடுத்துக் கொள்வது அவசியம். இத்தகைய இதய நோயாளிகளுக்கு நண்டு இறைச்சி நல்ல ஒரு உணவாக அறியப்படுகிறது.

இவற்றில் உள்ள மேலே கூறிய ஊட்டச்சத்துகள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. நிறைவுற்ற கொழுப்பு நண்டு இறைச்சியில் குறைவாக உள்ளது. உடல் கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதை தடுத்து அதனை மலம் வழியாக வெளியேற்ற நண்டில் உள்ள ஸ்டீரால் என்னும் கூறு உதவுவதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், நுண்கிருமிகள் உடலைத் தாக்கி நோய்கள் உண்டாக வழி வகுக்கும். ஆகவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த நண்டை உட்கொள்ளலாம். நண்டு இறைச்சியில் உள்ள செலெனியம் , நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவித்து தீங்கு விளைவுக்கும் கூறுகளிடம் போராட உதவி நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவுகிறது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது.

மனநலம் அறிவாற்றல் மற்றும் கவனத்தை அதிகரிக்கும் பண்பு, நண்டு இறைச்சியில் உள்ள புரதம், ஜின்க் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவற்றிற்கு உண்டு. மைய நரம்பு மண்டலத்தில் உருவாகும் மைலின் என்னும் இரத்தக் கொழுப்பை வலிமைப் படுத்தி, நரம்பு மண்டலத்தை பாதுகாக்க உதவுகிறது. இதனால் நரம்பு பாதையில் வீக்கம் உண்டாவது குறைகிறது.

தோல், கண்கள் மற்றும் நரம்பு மண்டலம் வைட்டமின் B2 என்றும் அறியப்படும் ரிப்போபிலவின், கொழுப்பு மூலக்கூறுகள் (ஸ்டெராய்டுகள்), சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் தோல், கண்கள் மற்றும் நரம்பு மண்டலத்தை பராமரிக்க தேவைப்படும் ஒரு ஊட்டச்சத்து ஆகும் செரிமான பாதையில் உள்ள இரும்பு சத்தை உறிஞ்சவும், புரதம், கொழுப்பு மற்றும் கர்போஹய்ட்ரேட் ஆகியவற்றை நொறுக்கி உடலுக்கு ஆற்றலைத் தரவும் ரிபோப்லேவின் உதவுகிறது. .

காயங்கள் வேகமாக குணமடைய காயம் அல்லது புண் ஏற்பட்டால், அவை குணமாக சில காலம் பிடிக்கும். அவற்றை விரைவாக குணப்படுத்துவதில் உணவு முக்கிய பங்காற்றுகிறது. நண்டு இறைச்சி இத்தகைய காயங்களை ஆற்றுவதில் விரைந்த மற்றும் சிறந்த பலன்களைத் தருகிறது. நண்டில் உள்ள ஜின்க், வைட்டமின் பி 12, வைட்டமின் சி ஆகியவை எரித்ரோசைடுகளை உற்பத்தி செய்ய உதவுகின்றன. இவை புதிய திசுக்களின் கட்டுமானத்தில் உதவுகின்றன.

ப்ரோஸ்டேட் புற்று நோய் காட்மியம், ஆர்சனிக், சில்வர், மெர்குரி போன்றவற்றின் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய தன்மையைப் போக்கும் அளவிற்கான செலெனியம் நண்டு இறைச்சியில் உள்ளது. இதனால் புற்று நோய் அணுக்களைப் போக்குவதில் விரைந்து செயல்படவும், கட்டிகளின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தவும் நண்டு உதவுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள நண்டு இறைச்சி போன்ற உணவுகள், ப்ரோஸ்டேட் புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க உதவுவதாக க்ளினிகல் கான்சர் ஆராய்ச்சி என்னும் ஒரு ஆய்வு கூறுகிறது.

இன்சுலின் அளவு நண்டில் குரோமியம் அதிகம் இருப்பதால், இரத்த சர்க்கரை அளவு, இன்சுலின் அளவு ஆகியவற்றை குறைக்கவும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் அளவை சீரான நிலையில் பராமரிக்கவும் சிறந்த முறையில் உதவுகிறது. ஆகவே நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு பயமும் இல்லாமல் நண்டை தங்கள் உணவில் இணைத்துக் கொள்ளலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியது நண்டு உண்பதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். வயிற்று வலி, வாய் அரிப்பு, முகம், உதடு, நாக்கு, கை விரல்கள், போன்றவற்றில் வீக்கம் ஏற்படுவது, மயக்கம் ஆகியவை உண்டாகலாம். ஒவ்வாமை இருப்பவர்கள் நண்டு சாப்பிடுவதை தவிர்க்கவும்.

1 1536906996

Related posts

இரவு நேரத்தில் தயிரை சாப்பிடலாமா? கூடாதா?

nathan

கெட்ட கொழுப்பை குறைக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

கசப்பான சுண்டைக்காயை தினமும் சாப்பிட்டலாமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

nathan

தூங்குவதற்கு முன் கிரீன் டீ குடிக்கலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சீரகப் பொடி கலந்த நீரை எந்த நோய்க்கு எவ்வாறு பயன்படுத்தலாம்?

nathan

சூப்பரான கருப்பு உளுந்து கஞ்சி

nathan

அப்ப உடனே இத படிங்க… பேலன்ஸ்டு டயட்

nathan

கல்சியம் சத்து குறைபாடா? அப்ப இத படிங்க!

nathan