எடை குறைய

தினமும் 200 கலோரிகளை குறைக்க வேண்டுமா..?எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

உடல் எடையைக் குறைப்பதற்கு ஒவ்வொரு செயற்பாடுகளிலும் முழுமனாதாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது.1/2 கிலோ எடையைக் குறைப்பதற்கு குறைந்தது 3500 கலோரிகளாவது குறைக்க வேண்டியுள்ளது.

உடல் எடையைக் குறைப்பதற்கு கலோரிகள் நிறைந்த உணவுகளை சிறிது சிறிதாக குறைப்பது சரியான தேர்வாக இருக்கும். அத்துடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களையும் வளர்த்துக் கொள்வது அவசியமானது. தினமும் 200 கலோரிகள் குறைப்பது இலகுவானதாக இல்லையென்றாலும், அது கடினமான செயலும் அல்ல.

200 கலோரிகளை தினமும் குறைப்பது எப்படி?

1. பிளக் காபி அருந்துதல்.
சர்க்கரை இல்லாத பால் காபியில் 220 கலோரிகளும் பிளக் காபியில் 2 கலோரிகளும் இருப்பதனால், பிளக் காபியை பழக்கப்படுத்திக் கொள்வது சிறந்தது.

2.உணவை மெதுவாக மென்று சாப்பிடுதல்.
உணவினை நன்றாக மென்று சாப்பிடுவதனால் இலகுவாக வயிறு நிறைவதுடன் பசியையும் குறைத்து விடுகிறது. இதனால் உணவில் எடுத்துக் கொள்ளும் கலோரிகள் குறைவடைகிறது.

3. சோடாக்கு பதிலாக எலுமிச்சப்பழச் சாற்றைப் பயன்படுத்தல்.
தாகத்திற்கு சோடாவை குடிப்பதைத் தவிர்த்து உடன் தயாரிக்கப்பட்ட எலுமிச்ச பானத்தை அருந்துவதனால் 200 கலோரிகல் வரை குறைக்கலாம்.

4. வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளுதல்.
கடையில் வாங்கும் உணவுகளை விட வீட்டில் தயாரித்த உணவுகளை உண்பதனால் 140 கலோரிகள் வரை குறக்க முடியும். எனவே உங்கள் உணவுகளை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளுங்கள்.

5. ஒரு கிளாஸ் வைனை உட்கொள்ளுதல்.
ஒரு கிளாஸ் வைனில் 125-150 கலோரிகள் வரை இருப்பதனால் நீங்கள் 4 கிளாஸ் எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் 2 கிளாஸாக குறைப்பதனால் கலோரிகள் குறையும்.

food2

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை வழக்கப்படுத்திக் கொள்ளுதல்.

•கலோரிகள் குறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்.
•இறைச்சிக்கு பதிலாக பச்சை காய் வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்.
•தினமும் உடலிற்கு தேவையான கலோரிகளிற்காக பால், சீஸ் மற்றும் பல பால் உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுதல்.
•காய்களில் தாயாரிக்கப்பட்ட சூப் எடுத்துக் கொள்ளுதல்.
•தினமும் உண்ணும் உணவில் முழு தாணியங்கள், காய்களில் தாயாரிக்கப்பட்ட சாலட், சான்ட்விச் போன்றவற்றைச் சேர்த்தல்.

ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்தல்.

•சிற்றூண்டிகளை தவிர்த்து பழங்களையும், கடலைகளையும் உட்கொள்ளுதல்.
•புரோட்டின் நிறைந்த காலை உணவிற்கு பதிலாக சீரியல் உட்கொல்வது சிறந்தது.
•பொரித்த உணவுகலிற்கு பதிலாக அவித்த உணவுகளைச் சாப்பிடுவதனால் 200 கலோரிகல் வரை குறைக்கலாம்.
•பதப்படுத்திய உணவுகளில் அதிகளவான கலோரிகள் இருப்பதனால் உடன் தயாரிக்கும் உணவுகளை தேர்வு செய்யவும்.
•சோடா, மதுபானங்களைத் தவிர்ப்பதனால் 200 கலோரிகளாவது குறைக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button