மருத்துவ குறிப்பு

30 வயது முதல் 50 வயது வரை ஆண்-பெண் தாம்பத்திய நிலை

 

30 வயது முதல் 50 வயது வரை ஆண்-பெண் தாம்பத்திய நிலை ஆண் – பெண் இருவருக்கும் எந்தெந்த வயதில் செக்ஸ் ஆர்வம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். 30 வயதில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள்.

ஆனால் இந்த வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது. குடும்பம், குழந்தை, நிரந்தர வருவாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவலைகள் அதிகரிக்கிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது. 40 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது.

ஆனாலும் செக்ஸ் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது. இதே வயதில் ஆண்கள் பலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள்.

இருந்தாலும் குறையும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்காக அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிடுவதால், செக்ஸ் உணர்வுகளில் கொஞ்சம் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். 50 வயதில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள்.

அதனுடன் போராடத் தொடங்குவதால் செக்ஸ் ஆர்வத்தை கெடுக்கிறது இந்தப் பருவம். ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளின் தாக்கம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே விரைப்புத் தன்மையில் தளர்வு ஏற்படுவதால் அவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் குறைகிறது.

அரிதாக எப்போதாவது ஆர்வம் எழுகிறது. 30 வயது முதல் 50 வயது வரை ஆண்-பெண் தாம்பத்திய நிலை இப்படித்தான் இருக்கிறது. இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்ய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

Related posts

கோடை நோய்களை தடுப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரகங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள்!!!

nathan

டென்டல் கிளிப்… டென் கைட்லைன்ஸ்!

nathan

இரண்டாம் முறையாக கர்ப்பமடைந்த விஷயத்தை முதல் குழந்தையிடம் எவ்வாறு பகிர வேண்டும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் நோக்கம் என்ன?

nathan

சு கர் ஃப் ரீ மா த்திரைகளை சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளே! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

அடிக்கடி தலைவலி வருவதற்கான காரணங்கள்

nathan

கணவன் மனைவி பிரிவால் குழந்தை நிலை என்னவாகிறது தெரியுமா?

nathan

இதை கட்டாயம் படியுங்கள் மூலநோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள எளிய வழிகள்!

nathan