ஆரோக்கியம் குறிப்புகள்

நீங்கள் எந்த பக்கம் படுத்துறங்க வேண்டும் தெரியுமா..? அப்போ கட்டாயம் இத படிங்க!

தூக்கம் என்பது நம் அனைவருக்கும் அத்தியாவசியமானதொன்றாகும். சரியான தூக்கம் இல்லாத போது அது பல்வேறு விளைவுகளை கொண்டு வரும்.

தூக்கம் இன்மைக்கு பல்வேறு காரணங்கள் உண்டு. சிலருக்கு அவர்கள் படுக்கும் விதத்தை பொருத்தும் தூக்கமின்மை ஏற்படும். நாம் படுக்கும் விதம் எமது ஆரோக்கியத்தை பாதிப்பதோடு சோர்வு, தசைப்பிடிப்பு, தலைவலி, மற்றும் இளவயதில் தோலில் சுருக்கம் ஏற்படல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

அந்த வகையில் நாம் உறங்கும் போது எமது இடது புறமாக சாய்ந்து உறங்குவது சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடது புறமாக உறங்குவதன் மூலம் உடலில் உள்ள கழிவுகள் வெற்றிகரமாக அகற்றப்படுவதோடு இரத்த ஓட்டமும் சீராக நடைபெறும். இதன் மூலம் உணவு சமிபாடடைதலும் சீராக்கப்படும்.

இடது புறமாக உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்

01. இடது புறமாக உறங்குவதன் மூலம் குடல் மற்றும் பெருங்குடலில் உள்ள கழிவுகள் துல்லியமாக அகற்றப்படும்.

02. இடது புறமாக இதயம் அமைந்துள்ளதால் இடது புறத்தில் உறங்கும் போது இதயத்திற்கு அனுப்பப்படும் இரத்தத்தின் அளவு அதிகரித்து இதய ஆரோக்கியம் பேணப்படும்;.

03. கர்பிணிப் பெண்களுக்கு உகந்த முறை இதுவாகும். கர்ப்பிணிகள் இடது புறமாக உறங்குவதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து முதுகுப் புறத்தில் உள்ள அழுத்தம் குறைவடையும். அத்துடன் கருப்பை, சிறுநீரகங்கள் மற்றும் சிசுவுக்கு செல்லும் இரத்தம் தடையின்றி செல்லும்.

04. உடம்பில் வயிறும் இடது புறத்தில் அமைந்துள்ளதால் இடது புறத்தில் உறங்கும் போது அமிலங்கள் ஒன்று திரள்வது தடுக்கப்பட்டு நெஞ்செரிவும் தடுக்கப்படும். சிலருக்கு உணவு உட்கொண்டவுடன் நெஞ்செரிவு ஏற்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில் இடது புறம் படுத்து உறங்கினால் நெஞ்செரிவு நிற்கும்.

sleep2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button