மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா தூக்கமின்மையால் வரும் பிரச்சினைகள் தெரியுமா?

இன்றைய வாழ்க்கை முறையில் ஏராளமானோர் சரியான தூக்கம் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணமாக உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மனிதனின் பணிச்சுமை காரணமாக இருக்கிறது. மனிதன் ஆரோக்கியமாக வாழ தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த தூக்கம் சரியாக கிடைக்காவிட்டால் அது உடலில் பல நோய்களை உண்டாக்கும்.

தூக்கத்தின் மூலம் தான் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது. சரியான ஓய்வு கிடைக்காமல் உடல் இயங்கிக் கொண்டிருந்தால், உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே சாப்பிடுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே போல் தூக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்காக தூக்க மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது.

24 மணிநேரம் வேலை செய்துவிட்டு அடுத்த 24 மணி நேரத்தில் ஓய்வு எடுத்து கொள்ளலாம் என நினைப்பது முட்டாள்தனம். தினமும் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்குவது மனிதனுக்கு மிக அவசியம். தூக்கம் வரவில்லை என்றால் கூட, நாம் அந்த சூழ்நிலையையை உருவாக்கி கொள்ள வேண்டும்.

நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெற இரவில் படுக்கையில் படுத்து தூங்க வேண்டும். நாற்காலியில், சோபாவில் தூங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தூக்கம் வரவில்லை என்றால், படுக்கும் முன்பு சிறிது நேரம் புத்தகம் படியுங்கள். ஆர்வத்தை தூண்டும் புத்தகத்தைப் படிக்காமல், போரடிக்கும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். அப்போது தான் விரைவில் தூக்கம் வரும்.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரத்தில் தூங்காமல், தினமும் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தைக் வைத்து கொள்ளுங்கள். தூங்கும்போது எதிர்காலத்தை நினைத்து தூங்காமல், அன்றய பொழுதில் நடந்தவற்றை நினைத்து தூங்குங்கள் அப்பொழுது தூக்கம் நன்றாக வரும். நாம் நாளை என்ன நடக்கும் என நினைத்து தூங்கினால் கண்டிப்பாக பதட்டத்திலே தூக்கம் வராமல் அவதிபடவேண்டியிருக்கும்.71857395 12308 13248

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button