முகப் பராமரிப்பு

முக அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்- இதை மட்டும் பயன்படுத்துங்கள்

பெண்களின் அழகாய் காட்டுவதில், அவர்களின்ல கண்களுக்கு அடுத்த‍படியாக

பிறர் கண்ணில்படுவது மூக்குதான் இந்த மூக்கை சுற்றியுள்ள இடங்க ளில் இந்த பிளாக் ஹெட்ஸ் ( Blackhead in Nose ) தொல்லை கொடுக்கும். அவற்றை நீக்காவிட்டால் நீண்டகாலம் முகத்தில் தங்கி உங்களது அழகைக் கெடுக்கும். சரியான முகப் பராமரிப்பு இல்லாததால் இவை கள் வரக்கூடும். இதனை சரிசெய்ய நம் வீட்டிலேயே தீர்வு இருக்கிறது.

பிளாக் ஹெட்ஸ் ( Blackhead ) பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…!

பேக்கிங் சோடா ( Packing Soda )வில் ஆன்டி-பாக்டீரியல் ( Anti-Bacterial ) மற்றும் ஆன்டி-ஃபங்கல் ( Anti-Fungal ) தன்மை உள்ளது. மேலும் இது ஸ்கின் பராமரிப்புக்கு ஏற்றது. சமையல் சோடா ( Cooking Soda ) மற்றும் ஓட்ஸ் சம அளவு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் ( water ) கலந்து பேஸ் டாக்கி, பிளாக் ஹெட்ஸ் ( Blackhead ) இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் ( Massage ) செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் அதை கழுவவும். இதை ஒரு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சீக்கிரமே கருமை மறையும்.

இலவங்கப்பட்டைக்கு அதிகளவு ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. மேலும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. 2 தேக்கரண்டி பட்டை பொடி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து பாதிக் கப்பட்ட இடங்களில் அப்ளை செய்யுங்கள். பிறகு15 நிமிடங்கள் கழித்து கழுவும். இதை தினசரி செய்யவும்.

சர்க்கரை ( Sugar ) ஒரு அருமையான ஸ்கிரப் ( Scrub ). தேன் அழுக்கை அகற்றி தோலுக்கு ஈரப்பதத்தை தருகிறது. மூன்று தேக்கரண்டி சர்க்கரையுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்க்கவும். அதை மெதுவாக மசாஜ் ( Massage ) செய்து பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.

முட்டை( Egg )யின் வெள்ளைக் கரு தோலை இறுக்கமாக்கும். அதோடு சருமத்தில்உள்ள அழுக்கை நீக்க உதவும். முகத்திற்கு இது ஒரு சிறந்த ஃபேஸ் பேக் ( Face Pack ). ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்கு அப்ளை செய்து மசாஜ் ( Massage ) செய்யுங்கள். பிறகு சுத்தமாக கழுவினால் பிளாக் ஹெட்ஸ் ( Blackhead ) மறைந்து சருமம் பளபளக்கும்.

201709061336061265 1 facepack. L styvpf 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button