அழகு குறிப்புகள்

உங்க தளர்ந்த மார்பகத்தை மீண்டும் சிக்கென மாற்ற சூப்பர் டிப்ஸ்…

பொதுவாக எல்லா பெண்களுக்கும் தங்களுடைய மார்பகம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. அதிலும் எதிர் பாலினத்தவரை ஈர்க்கும் கவர்ச்சிக்கான இடம் என்பதால், அது சிக்கென மென்மையாக இருக்க வேண்டிய எதிர்பார்ப்பும் பெண்களுக்குக் கூடுகிறது. அதற்கு இப்போது நவீன சிகிச்சைகள் எல்லாம் வந்துவிட்டன.

ஆனால் அதில் எல்லாம் உயிர் போகும் அளவுக்கு ஏராளமான பக்க விளைவுகள் உண்டு. அதனால் அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் இயற்கையான முறைகளைப் பின்பற்றுவதே மிகச் சிறந்த வழி. அந்த வகையில் பெண்கள் தாங்கள் விரும்பும் பளபளப்பான, மென்மையான மார்பகத்தைப் பெறுவதற்கு என்ன இயற்கை வழிகளைக் கடைபிடிக்கலாம் என்று பார்ப்போம்.

மார்பகத் தளர்ச்சி சில பெண்களுக்கு பொதுவாக சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டால், மிக எளிதாக மார்பகங்கள் தளர்ந்து தொங்க ஆரம்பித்துவிடும். சிலருக்கோ மார்புப் பகுதியில் அதிக சதைப்பிடிப்பு இருந்தால், அது இயற்கையாகவே தளர்வாக இருப்பது போன்றும் பெரிதாக இருப்பது போலவும் தோற்றமளிக்கும். சில பெண்களுக்கு அவர்களுடைய உருவத்துக்கும் மார்பக அளவுக்கும் சம்பந்தமே இல்லாத அளவுக்கு அளவு மிகப் பெரிதாக இருக்கும். அளவு எப்படி இருந்தாலும் பார்க்க பளபளப்புடன் மென்மையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

கவர்ச்சி, ஈர்ப்பு பொதுவாக மார்புப்பகுதி என்பது ஈர்ப்பு மிகுந்த கவர்ச்சிப் பிரதேசங்களுள் ஒன்றாக இருக்கிறது. ஆண்கள் பார்க்கும்போது முதலில் பெண்களுடைய கண்கள் மந்றும் பெண்களின் மார்பகப் பகுதியையே நோட்டமிடுவார்கள். அதன்பின் தான் கண்ணைப் பார்த்துப் பேச ஆரம்பிப்பது எல்லாம். அதுமட்டுமில்லை. பெண்களுக்கே தங்களுடைய மார்பகங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பல பெண்கள் தங்களுடைய மார்பகங்களைத் தாங்களே ரசித்துக் கொள்வதும் உண்டு. அப்படிப்பட்ட மார்பகத்தை மென்மையாக சிக்கென தளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம் தானே?

ஐஸ் அண்ட் ஹாட் மசாஜ் தினமும் சில நிமிடங்கள் இறுக்கமாக இருக்கிற மார்பகங்களை மசாஜ் செய்துவிட வேண்டும். ஐஸ் கட்டிகள் கொண்டும் மசாஜ் செய்யலாம். அதேபோல் ஹாட் வாட்டர் மசாஜ் கூட செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மார்பகங்களின் மயிர் துளைகளுக்குள் இருக்கிற தூசிகள், அழுக்குகள் வெளியேறும். எப்போதும் நீங்கள் மார்பகங்களை ஆடைகளின் மூலம் மூடியே வைத்திருப்பதால் இறந்த செல்கள் வெளியேறாமல் உள்ளேயே தங்கிவிட வாய்ப்புகள் உண்டு. அதனால் இரவு நேரங்களில் பிரா அணிவதை தவிர்த்திடுங்கள். முடிந்தவரையில் மேல் ஆடையின்றி, துங்குவது நல்லது. வேறு சில ஆரோக்கியக் குறைபாடுகளும் கூட அதனால் குறையும்.

கிரீம் பேசியல் கிரீம் என்பது முகத்திற்கு தடவக்கூடியது. அதை வேறு எங்கும் தடவக்கூடாது என்று நாம் மிகவும் தவறாக புரிந்து வைத்திருக்கிறோம். பேசியல் கிரீமை மார்பகங்களிலும் தடவலாம். அது எப்போதும் உங்களுடைய மார்பகங்களை பளபளப்பாக, மென்மையாக வைத்திருக்க உதவும். அதோடு மட்டுமல்ல சருமத்துக்கு பொலிவைத் தந்து மார்பக சருமம் சுருக்கமடையாமலும் ஆனு்டி ஏஜிங் ஏஜெண்ட்டாகவும் செயல்படும். இதற்கென தனியாக க்ரீம்களே விற்கின்றன. அவற்றை வாங்கியும் பயன்படுத்தலாம்.

படுக்கும் முறை ஆண்கள் பெரும்பாலும் மல்லாந்து அல்லது ஒருக்களித்துப் படுப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் பெண்கள் சிறிது நேரம் கூட ஒரே மாதிரி படுத்திருப்பதில்லை. பெரும்பாலான பெண்கள் நல்ல தூக்கத்தில் இருக்கும்போது குப்புறப் படுத்துத் தூஞ்குகிறார்கள். அதில் ஏதோ சுகம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் குப்புறப் படுத்தால் மார்பகங்கள் தொங்க ஆரம்பித்துவிடும். அதன் அழகு கெட்டுவிடும். குப்புறப்படுப்பதை விட மல்லாக்க படுப்பதே நல்லது.

மாய்ச்சரைஸர் முகம், கை, கால் சருமத்துக்கு எப்படி மாய்ச்சரைஸர் தேவைப்படுகிறதோ அதேபோலத்தான் மார்பகங்களின் மீதுள்ள சருமத்துக்கு மாய்ச்சரைஸரும் நீர்ச்சத்தும் மிக அதிக அளவில் தேவைப்படுகின்றன. அதனால் தினமும் கட்டாயம் மார்பக சருமத்துக்கு மாய்ச்சரைஸர் பயன்படுத்துங்கள். அது உங்கள் மார்பகத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

சன் ஸ்கிரீன் பொதுவாக மார்பகத்தை துணியால் மறைத்துதான் வைத்திருப்போம். ஆனாலும் வெளியில் செல்லும்போது மார்பகங்களுக்கு சன் ஸ்கிரீன் தடவாமல் செல்லாதீர்கள். எல்லா வகையிலும் பாதுகாப்பாக இருக்க சன் ஸ்கிரீன் மிக அவசியம்.

உணவுமுறை டயட் மூலமும் மார்பகங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். அதிக அளவு புரோட்டீனும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிடும் கொண்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் அதிக அளவிலான நீர்ச்சத்தும் ஆற்றலும் கிடைக்கும். அதேபோல் பீன்ஸ், முட்டை மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

3781

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button